இளநரையை போக்கும் சிறந்த இயற்கை ரகசியம்
இன்றைய சூழலில் வேலைப்பலு, ஆரோக்கியமற்ற உணவு முறைகளால் பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதில், ஒன்றுதான் முடி பிரச்சனை. இதனை இயற்கையான முறையில் எவ்வாறு சரி செய்ய இயலும் என பார்க்கலாம்.

பெண்கள் , ஆண்கள் என பாகுபாடின்றி சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை இளநரை, முடி உதிர்வு. இன்றைய சூழலில் வேலைப்பலு, ஆரோக்கியமற்ற உணவு முறைகளால் பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதில், ஒன்றுதான் முடி பிரச்சனை. இதனை இயற்கையான முறையில் எவ்வாறு சரி செய்ய இயலும் என பார்க்கலாம்.
கரிசலாங்கன்னி:
கரிசலாங்கன்னி தலைமுடி வெள்ளையாவதை தடுப்பதுடன் முக்கிய பிரச்சனையான தலைமுடி உதிர்தலையும் தடுக்கிறது. காய்ந்த கரிசலாங்கண்ணி வில்லைகளை, நல்லெண்ணெயில் ஊறவைத்து தலையில் தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளர்வதை கண்கூடாக பார்க்க முடியும்..
ரிதா அல்லது சோப்பு கொட்டைகள்:
இயற்கை ஷ்யாம்புவாக பயன்படுத்தப்பட்டு வருவது ரிதா கொட்டைகள். இக்கொட்டைகளை பயன்படுத்துவதனால் முடியின் அடர்த்தி கூடுவதுடன், முடி வரண்டு போவதையும் தடுக்கிறது. ரிதா கொட்டையை இரவு முழுவதும் நீரில் ஊரவைத்து, காலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இந்த கொட்டைகள் ஷ்யாம்புவை போலவே நுரைக்கும் தன்மை கொண்டது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதனை பயன்படுத்தி வர முடி உதிர்வு கட்டுப்படுவதுடன், நல்ல முடி வளர்ச்சியையும் காண முடியும்.
நெல்லிக்காய்:
முடி வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கும் இயற்கை மூலிகைகளில் நெல்லிக்காயும் ஒன்று, இந்த நெல்லிக்காயை ஜூஸாக எடுத்துக்கொண்டால் தலை முடி கருமையாகவும், பலபலப்பாகவும் இருக்கும். மேலும் நெல்லிக்காய் பொடியை, மருதானி பொடி மற்றும் தயிருடன் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து 2 மணி நேரம் ஊரவைத்து, குளித்து வர இளநரை மாறி முடி கருமையாக வளரும். நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சையை முடிகளின் வேர் கால்களில் தேய்த்து வர வேர்கால்கள் நல்ல வழுப்பெறும்.
சீகக்காய் :
சீகக்காய் ஆயூர்வேத குளியல் பொடியாக பல்லாண்டு காலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வை குறைக்கிறது. சீகக்காய் பொடியை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊரவைத்து, காலையில் தலைக்கு தேய்த்து குளித்து வர நல்ல பலன்கள் கிடைக்கும். சீகக்காயை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும்.
வேப்பிலை :
வேம்பில் உள்ள பயன்கள் எண்ணிலடங்காதவை, இத்தகைய வேப்பிலையை ஒரு கைபிடி எடுத்து நீரில் வேகவைத்து அந்த நீரை தலையில் தேய்த்து வர பொடுகு, பேன், தலையில் ஏற்படும் அறிப்பு ஆகியவை குணமாகும். வாரத்தில் மூன்று முறை இந்த நீரை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
newstm.in