தாய்ப்பால் கொடுப்பதால் தாய் பெறும் நன்மைகள்!

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உயர் ரத்த அழுத்த பிரச்னையில் இருந்து விடுபடுகிறார்கள் என அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் சொல்கின்றது.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய் பெறும் நன்மைகள்!
X

பிரசவத்தின் மூலம் பிள்ளை பெரும் ஒவ்வொரு உயிரினமும், சிசுவிற்காக தனது உதிரத்தை பாலாக மாற்றி, பல ஊட்டச்சத்துக்களை உட்புகுத்தி, உணவாக அளிக்கிறது. இந்த வகையை சார்ந்தவர்கள் தான் மனித இனமும். ஆனால் மற்ற எல்லா செயல்களிலும் மாற்றத்தை புகுத்திய மனித இனம், குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதிலும் தங்களுக்கு ஏற்றார் போல பலமாற்றங்களை செய்து கொண்டனர்.

நாகரிக மாற்றத்தின் காரணமாக, இரு பாலரும் பணிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரசவத்திற்கு பின்னர் சில மாதங்களிலேயே பணிக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும் பெண்கள் தாய் பாலை புட்டியில் எடுத்து வைத்து விட்டு சென்று விடுகின்றனர்.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய் பெறும் நன்மைகள்!

அதே போல, தனது அழகு கெட்டுவிடும் என நினைக்கும் பெண்கள் தாய் பால் கொடுப்பதையே தவிர்த்து விடுகின்றனர். இது போன்ற செயல்பாடுகள் தாய் மற்றும் சேய் என இருவருக்கும் மிகப்பெரிய தினங்களை உண்டாக்க கூடியவை. குழந்தை பெற நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் தாய்ப்பால் கொடுப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள் :

தாய் பால் கொடுப்பதனால், பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் ரத்த இழப்பு குறைகிறது.

பிரசவத்திற்கு பின்னர், உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைக்கும் தாய்மார்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்று நோய் வருவது குறைவு என சொல்லப்படுகிறது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உயர் ரத்த அழுத்த பிரச்னையில் இருந்து விடுபடுகிறார்கள் என அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் சொல்கின்றது.

பெண்களுக்கு இதய வாழ்வில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக மரடைப்பு ஏற்படுவது தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் தவிர்க்க முடியுமாம்.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய் பெறும் நன்மைகள்!

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் கருப்பை விரைவில் சுருங்கி இயல்பு நிலைக்கும் வரும் வாய்ப்புகல் அதிகம் .

தாய் பால் கொடுப்பதன் மூலம் அடுத்த கர்ப்பம் விரைவில் உருவாவதை தவிர்க்க முடியுமாம். இது இயற்கையான கருத்தடையாக கருதப்படுகிறது.

தாய்ப்பால் கொடுப்பது தாயின் மார்பகங்களில் வீக்கம் மற்றும் வலி ஏற்படுவதை தடுக்கிறது.

தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு மூட்டுவாதம் அல்லது மூட்டுநோய் வரும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கிறது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியுமாம்.

இரண்டு விதமான நீரிழிவு பிரச்னையிலிருந்து தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தப்பிக்க முடியுமாம்.

உலகிலேயே சிறந்த உணவாகவும், சேயின் பிறப்புரிமையாகவும் இருக்கும் தாய்ப்பாலை குழந்தைக்கு முறையாக கொடுக்காவிட்டால் சேய் மட்டுமன்று தாயும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்னும் உண்மையை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, குழந்தை பெற்றுக்கொள்வதனால், பிறக்கும் குழந்தைகள் மட்டுமல்லாமல் தாயும் நலமுடன் இருக்க முடியும்.

newstm.in


newstm.in

Next Story
Share it