சிறுநீரக கற்களை கரையச் செய்யும் வாழைத்தண்டு..

உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளைக் குறைத்து தேவையற்ற ஊளைச் சதைகளைக் குறைக்கிறது. வாழைத்தண்டு சாறு பசி உணர்வை கட்டுக்குள் வைப்பதால் எடை குறைப்பு என்பது எளிதாகிறது.

சிறுநீரக கற்களை கரையச் செய்யும் வாழைத்தண்டு..
X

வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்பது ஆரோக்யமான வாழ்க்கைக்கு கனபொருத்தமான பழமொழியாக இருக்கும். வாழை போல் தலை முறை தலைமுறையாக செழித்து வளர வேண்டும் என்று வாழ்த்துவதற்கு காரணம் வாழை அடி முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டு அளவற்ற பயன்களைத் தந்து ஆரோக்யம் காப்பதால் தான்.

வாழைத்தண்டு, வாழை இலை, வாழைப்பழம், வாழைக்காய், வாழைப்பூ என்று எல்லாவற்றையும் உணவில் சேர்க்கிறோம். இதிலிருக்கும் வாழை நார் கூட பூத்தொடுக்க உதவுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க வாழை பொருள்கள் உடலில் இருக்கும் நோய்களை விரட்டி அடிக்கிறது என் பதை நம் முன்னோர்கள் முன்பே உணர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழைப்பூ ஆண்மையையும், பெண் தாய்மை அடைவதையும் ஊக்குவிப்பது போலவே வாழைத்தண்டு சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை கரைப் பதோடு, சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும் தடுக்கும் அற்புதமான மருந்தாக செயல்படுகிறது என்றே சொல்லலாம். பூரணமான குணத்தை அளிக்கும் உணவு மருத்துவத்தில் வாழை முதன்மையாக இருக்கிறது.

இலேசான கசப்பும், மிதமான கார்ப்பும் கொண்ட வாழைத்தண்டை நார் நீக்கி சுத்தம் செய்து பயன்படுத்துவோம். வாழைத்தண்டு கொண்டு பொரி யல், கூட்டு. சூப் போன்றவற்றைச் செய்வோம். எளிதாக செய்யக்கூடியது வாழைத்தண்டு ஜூஸ். இந்த வாழைத்தண்டு உடலில் என்னென்ன அற் புதங்களை நிகழ்த்துகிறது பார்க்கலாமா?

சிறுநீரக கற்களை கரையச் செய்யும் வாழைத்தண்டு..

சிறுநீரக பிரச்னை:
சிறுநீரக பாதையில் எரிச்சல், நோய் தொற்று, சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் இதற்கு வாழைத்தண்டு மட்டுமே சிறந்த மருந்தாக இருந்து அந்தக் கல்லை கரைக்க செய்கிறது. சிறுநீரை பெருக்க செய்வதோடு நீர் சுளுக்கால் அவதியுறுபவர்களுக்கு கை கண்ட பக்க விளைவு இல்லாத உடனடி நிவாரணமாக வாழைத்தண்டு இருக்கிறது.

உடல் எடை குறையும்:
வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் இருக்கிறது. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளைக் குறைத்து தேவையற்ற ஊளைச் சதைகளைக் குறைக்கிறது. வாழைத்தண்டு சாறு பசி உணர்வை கட்டுக்குள் வைப்பதால் எடை குறைப்பு என்பது எளிதாகிறது. சோர்வு ஏற்படாத வண்ணம் சத்துக்களையும் கொண்டிருப்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புவர்களுக்கு இது முதல் மருந்தாகவே இருக்கும்.

நீரிழிவு கட்டுக்குள் வைக்க:
இன்று பெருகி வரும் நீரிழிவு நோயாளிகள் அதற்குரிய மாத்திரைகளை எடுத்துக்கொண்டாலும் மன அழுத்தம், உணவு முறை என்று நீரிழிவின் அளவு கட்டுக்கடங்காமல் எகிறி விடுகிறது. இதைக் கட்டுக்குள் வைக்கும் உணவு பொருளில் வாழைத்தண்டும் ஒன்று. வாழைத்தண்டில் உள்ள சத்துகள் இன்சுலின் உற்பத்தியை இயல்பாகவே அதிகரிக்கிறது. இது சிறுநீரை அதிகரிக்க செய்யும் என்பதால் நீரிழிவு உள்ளவர்கள் அன்றாடம் எடுக்காமல் வாரம் இரண்டு நாள்கள் பட்டியலிட்டு எடுத்துக்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும்.

இன்ன பிற பயன்கள்:
காரசாரமான அமிலங்கள் கலந்த உணவு நெஞ்செரிச்சலை உண்டாக்கி விடும். அச்சமயத்தில் இதை ஈடு செய்ய காலை வெறும் வயிற்றில் ஒரு தம்ளர் வாழைத்தண்டு சாறு போதும். நெஞ்செரிச்சல் பறந்துவிடும். வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னையிலி ருந்தும் உடனடியாக விடுபடலாம். பெண்கள் மாதவிடாய் காலங்களில் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் உஷ்ணம் குறையும், அதிக இரத்தப் போக்கு கட்டுப்படும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும். ஹீமோகுளோபின் குறைபாடுள்ளவர்களின் குறைகளை நீக்கி இரத்த சோகையைத் தடுக்கும். பொட்டாசியம் நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வாழைத்தண்டை பொரியல்,கூட்டாக்கி செய்து சாப்பிடலாம். ஆனால் சாறு மேலும் பலனளிக்க கூடியதே. வாழைத்தண்டை நார் நீக்கி சுத்தம் செய்து, மிக்ஸியில் மைய அரைத்து வடிகட்டி உப்பு, மிளகுத்தூள் உடன் எலுமிச்சை, முள்ளங்கி, மோர் இவற்றில் ஏதேனும் ஒன்று சேர்த்து குடிக்கலாம்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் போது உப்பு சேர்க்காமல் இனிப்பு சேர்த்து கொடுக்கலாம். இயன்றவரை வடிகட்டாமல் குடித்தால் தான் நார்ச்சத்து முழுமையாக கிடைக்கும். ஆனால் கார்ப்பு சுவையால் அப்படியே குடிப்பதும் கொஞ்சம் சிரமமே. ஆனால் நோய்கள் குணமாக கசப்பான மருந்தை உட்கொள்வது போல இயற்கையான முறையில் உடல் ஆரோக்யம் பெற வேண்டுமென்றால் அப்படியே குடிப்பதுதான் கன பொருத்தமாக இருக் கும் என்கிறார்கள் அனுபவமிக்க பெரியவர்கள்.

இனி வாழைத்தண்டை சாறை ரசித்து ருசித்து குடியுங்கள். பலன் தான் அதிகமுண்டு என்கிறார்களே.பெரியவர்கள் சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்

newstm.in

newstm.in

Next Story
Share it