ஆரோக்யத்தை சீர்குலைக்கும் பத்து தவறுகள் !!

ஆரோக்யத்தை சீர்குலைக்கும் பத்து தவறுகள் !!

ஆரோக்யத்தை சீர்குலைக்கும் பத்து தவறுகள் !!
X

அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்காமல் விடும் சில நல்ல பழக்கங்களால், மிகப்பெரிய உடல் பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். நாம் தவறவிடும் ஆரோக்ய வழிமுறைகளால் ஏற்படும் உடல் உபாதைகளைப் பற்றி பார்க்கலாம்.

காலை உணவை தவிர்ப்பது:

ஆரோக்யத்தை சீர்குலைக்கும் பத்து தவறுகள்:

பரபரப்பான சூழலில், பணிக்கு செல்லும் அவசரத்தில் சிலர் காலை உணவை பற்றியே மறந்து விடுகின்றனர். உடல் செயல்பாட்டிற்கு காலை உணவு மிக அவசியமான ஒன்றாகும். காலையில் கட்டாயம் ஆரோக்யமான, நல்ல தரமான புரதம் கொண்ட உணவை சாப்பிட வேண்டும்.

அதிக அளவு கிரீம் நிறைந்த‌ காபி குடிப்பது:

ஆரோக்யத்தை சீர்குலைக்கும் பத்து தவறுகள்:

நம்மில் பலருக்கு காபி குடிக்காமல் அந்த நாளே நகராது. இத்தகைய காபியை ஒரு நாளில் இரண்டு முறை குடிக்கலாம். ஆனால், இரண்டு முறைக்கு மேல் அதிக கிரீம் உள்ள காபியை அருந்துவதால் தேவைக்கு அதிகமான கலோரிகள் உடலில் சேர்ந்து, உடல் எடையை அதிகரிப்பதுடன், பல் தொடர்பான பிரச்னைகளையும் கொண்டுவரும்.

அவசரமாக சாப்பிடுவது:

ஆரோக்யத்தை சீர்குலைக்கும் பத்து தவறுகள்:

மதிய இடைவேளையின் கடைசி நிமிடத்தில் தான் பலர் சாப்பிடவே செல்வார்கள், அவ்வாறு அதி வேகமாக சாப்பிடுவது, உடல் நலத்தை அதிகமாக பாதிப்படைய செய்வதுடன், உடல் பருமன், இதய கோளாறு போன்ற பிரச்னைகளையும் கொண்டு வருகிறது. எனவே, உணவை முதலில் சுவைத்து பின்னரே உள்விழுங்க வேண்டும்.

பொருந்தாத காலணிகளை அணிவது:

ஆரோக்யத்தை சீர்குலைக்கும் பத்து தவறுகள்:

பொருத்தமில்லாத காலணிகளை அணிவது தண்டு வடத்திற்கு அதிக ஆபத்தை தரக்கூடியவை. மிக உயரமான காலணிகள் அதாவது, ஹை ஹீல்ஸ் அணிவதால் கால் நரம்புகள் மிக விரைவில் சேதத்தை சந்திக்க நேரிடும். மேலும் பாதத்தில் அதித வலியையும் கொடுக்க கூடியது பொருந்தாத காலணிகள்.

இரவில் பல் துலக்காமை:

ஆரோக்யத்தை சீர்குலைக்கும் பத்து தவறுகள்:

பெரும்பாலானோர் உறங்க செல்வதற்கு முன்னர் பல் துலக்குவதில்லை, இதனால் அனேக பல் பிரச்னைகளை சந்திக்க நேரிடுவதுடன், விரைவிலேயே பல்லை இழப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஒவ்வொரு முறை உணவிற்கு பின்னரும் பல்லை சுத்தம் செய்வது மிக அவசியம். அதேபோல, மாதாமாதம் கண்டிப்பாக பல் துலக்க பயன்படுத்தும் டூத்ப்ரஷை மாற்ற வேண்டும்.

போதுமான அளவு தூக்கமின்மை:

ஆரோக்யத்தை சீர்குலைக்கும் பத்து தவறுகள்:

போதுமான அளவு தூங்காமல் இருப்பதால் உடலின் மெட்டபாலிச அளவு குறைந்து, உடல் பருமன் அதிகரிக்கிறது. மேலும்,இதனால் அதிக பசி உணர்வு ஏற்பட்டு அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடும். அதுமட்டுமல்லாமல், மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு, ரத்த அழுத்தம் கூடுதல் போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய பிரச்னைகள் உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இரவில் 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம்.

திறந்தவெளியில் உடற்பயிற்சி மேற்கொள்ளாமை:

ஆரோக்யத்தை சீர்குலைக்கும் பத்து தவறுகள்:

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பெரும்பாலானோர் உடற்பயிற்சி கூடங்களில் தங்களது பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் திறந்தவெளியில் உடற்பயிற்சியை தவிர்த்து விடுகின்றனர். உண்மையில் உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சி செய்வதை காட்டிலும், திறந்தவெளிகளில் உடற்பயிற்சி செய்வது நல்ல பலனை கொடுக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

காலையில் எழுந்தவுடன் முதுகு தண்டுவடத்தை நீட்சியடைய செய்வது:

ஆரோக்யத்தை சீர்குலைக்கும் பத்து தவறுகள்:

முதுகு எலும்பை நீட்சியடைய செய்வது அதாவது வளைப்பது போன்ற செயல்பாடு முதுகு வலியை குறைக்க உதவுகிறது, ஆனால் காலையில் எழுந்தவுடன் அவ்வாறு முதுகு எலும்பை நீட்சியடைய செய்வதால், முதுகு தண்டுவடத்திற்கு எதிரான‌ விளைவுகளை தந்துவிடும். அதற்கு பதிலாக வழக்கமான காபி குடித்தல், உங்கள் முகத்தை கழுவுதல் போன்றவற்றை செய்து விட்டு பின்னர் முதுகை வளைப்பது நல்லது.

சிறுநீர் கழிக்காமல் இருப்பது:

ஆரோக்யத்தை சீர்குலைக்கும் பத்து தவறுகள்:

சிலர் அடிக்கடி சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கி வைத்திருப்பர். அத்தகைய செயல்பாடுகளால் சிறிநீர் பையில் கல், சிறுநீர் தொற்று, நீர் கடுப்பு, சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படும் எரிச்சல் போன்ற உபாதைகளை சந்திக்க நேரிடும். முடிந்த வரை சிறுநீர் பையை காலியாக வைத்திருப்பது நல்லது. மேலும் சிறுநீர் தொற்றை ஏற்படுத்தக் கூடிய காபி,டீ, மது, காரமான உணவுகள்,சோடா பானங்கள், சாக்லேட்டுகளை தவிர்ப்பது நல்லது.

ஒரே பக்கமாக பையை தொங்க விடுவது:

ஆரோக்யத்தை சீர்குலைக்கும் பத்து தவறுகள்:

மடிக்கணினியை சுமந்து செல்ல பயன்படுத்தும் கைப்பை, முதுகுப்பையை ஒரே பக்கமாக, நீண்ட நேரம் தொங்க விடுவதால் தோல்பட்டை சார்ந்த பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஆகையால், அடிகடி பையை சுமக்கும் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது,ஒரு பையை எடுத்துச் செல்லும் பொழுது, அவ்வப்போது தோள்கள் அல்லது கைகளை முன்னும் பின்னுமாக மாற்றுங்கள்.

newstm.in

Next Story
Share it