சுறுசுறுப்பான நாளாக அமைய இதைக் குடிச்சுப் பாருங்க..!!

சுறுசுறுப்பான நாளாக அமைய இதைக் குடிச்சுப் பாருங்க..!!

சுறுசுறுப்பான நாளாக அமைய இதைக் குடிச்சுப் பாருங்க..!!
X

காபி அல்லது டீயின் முகத்தில் தான் நம்மில் பலருக்கு காலை நேரம் ஆரம்பிக்கும். ஒருநாள் தவறிவிட்டால் அன்றைய நாளே வீண் என்பது போல் எரிச்சலும், கோபமும் இருந்து கொண்டே இருக்கும். இருந்தாலும் வெறும் வயிற்றில் டீ,காபி குடிப்பதால் உடல் நிலை ஆரோக்கியத்திற்கு கேடு வந்து விடுமோ என்ற பயமும் நம்மில் பலருக்கும் உண்டு.

தினசரி காலையில் பாலுடன் துளசி இலைகள், பனங்கற்கண்டு சேர்த்து பருகி வர அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். உடலின் சுவாசத்தை சீராக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

துளசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன. துளசியை வெறுமனே வாயில் போட்டு மென்று சாப்பிடுவதை விட பாலுடன் சேர்த்து குடிக்கும் போது, அதன் மருத்துவ பண்புகள் தூண்டப்படுகின்றன.

துளசி சுவாசப் பிரச்சனைகளை சரிசெய்து இதயம் சீராக துடிக்க உதவி செய்கிறது. பால் இதயத்திற்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறது. இதனாலேயே அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம். இதனை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இந்தப் பாலை தினமும் குடித்து வரலாம்.

Tags:
Next Story
Share it