1. Home
  2. ஆரோக்கியம்

கோடைக்கு ஏற்ற தித்திக்கும் கரும்புச்சாறு ...!

கோடைக்கு ஏற்ற தித்திக்கும் கரும்புச்சாறு ...!

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடைகால வெயிலை சமாளிக்க என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் அவதிபடுகின்றனர். அப்படி கோடைகால வெயிலில் தவிக்கும் மக்களுக்கு பல குளிர்ச்சியான, உடலுக்கு இயற்கையான பொருட்கள் காணகிடைகின்றன. அவற்றில் பலரும் ஒன்று கரும்புச்சாறு.

கரும்பு என்றாலே பலருக்கு நினைவிற்க்கு வருவது இனிப்பு சுவை தான். வாயில் நீர் ஊற வைக்கும். கரும்புச்சாறு என்பது கோடைக்காலத்தில் இயற்கை நமக்கு அளித்த அற்புதமான பானம் ஆகும். நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வெள்ளைச் சர்க்கரையின் மூலப்பொருள் கரும்புதான் என்பது எல்லோருக்கும் தெரியும். வெள்ளைச் சர்க்கரை உடலுக்கு அதிக தீமைகளைத் தருகிறது. ஆனால் கரும்பு உடல்நலத்தினைப் பாதுகாக்கிறது. என்ன? கரும்பில் இருந்து பெறப்படும் வெள்ளை சர்க்கரை தீமை? ஆனால் கரும்பு நன்மையா? எனக் கேள்வி கேட்கலாம்……

கரும்பிலிருந்து வெள்ளைச்சர்க்கரை தயார் செய்யப்படும்போது கரும்புச்சாறானது பலவேதிப்பொருள்களுடன் வினைபுரிகிறது. இதனாலே உடல்நலத்திற்குத் தேவையான கரும்பிலிருக்கும் ஊட்டச்சத்துகள் உருமாற்றம் அடைந்து உடலுக்கு தீமை செய்கின்றன. உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த கரும்புச்சாறு குடிப்பதற்கு இனிமையாகவும், உடல் ஆரோக்கியதிற்கும் பெரும் உதவியாக உள்ளது.

கரும்புச்சாறு தயாரிப்பதற்க்கு என்று பிரத்யேக மெஷின் ஒன்று உள்ளது. கடைக்காரர் நீளமான கரும்புகளை ஒரு பக்கம் ஒன்றிரண்டாகவெட்டி மற்றொரு பக்கம் எடுத்தால், கரும்பு நசுங்கி சக்கையாகி, அதிலிருந்து ஜூஸைப் பிரித்துக் கொடுத்துவிடும். செயற்கைக் குளிர்பானங்களில் என்னென்ன இருக்கின்றன என்பது தெரியாமலேயே வாங்கி அருந்துவதைவிட, இவ்வாறு இயற்கை முறையில் நம் கண்ணெதிரே பிழிந்து கொடுக்கப்படும் கரும்பு ஜூஸை அருந்துவதில் பலருக்கும் அலாதியான விருப்பம் உண்டு. கரும்பின் இனிப்புச் சுவைக்கு நிகர் அது மட்டும்தான்.

கரும்பு எல்லாக் காலத்துக்கும் ஏற்ற ஆரோக்கிய பானம். அதிலும், கோடையில் இதன் பலன்கள் ஏராளம். கரும்பில் இரும்புச்சத்து, கால்சியம் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான சத்துகள் அடங்கியிருக்கின்றன. வெயில் காலத்தில் ஏற்படும் நீர் வறட்சி, நீரிழப்பு, உடல் சூட்டைத் தவிர்க்கவும் இது உதவும். உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளும். இது, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவதால், தொற்றுநோய்கள் நெருங்காது. கோடைக்காலத்தில் ஏற்படும் சிறுநீரகக் கல், சிறுநீரகத் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் நன்றாகப் பிரியும். உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றி, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இப்படி பல நன்மைகளை நமக்கு தருகிறது கரும்புச்சாறு.

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், கரும்புசாறின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

இனிய சுவையுடைய கரும்பு அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. கோடைகாலத்தில் அதிக உஷ்ணத்தால் காய்ச்சல் ஏற்பட்டது போல் இருக்கும். வாய் உலர்ந்து போகுதல், நாவறட்சி, அதிக தாகம் ஏற்படுதல், சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படும். உஷ்ணத்தை குறைப்பதால் இப்பிரச்னைகள் தீரும். இதற்கு கரும்புச்சாறு அற்புத பானமாக விளங்குகிறது.

கரும்புச் சாறில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு சத்துக்கள் உள்ளன. பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது. வாய் துர்நாற்றத்தை போக்கும். வயிற்று புண்களை ஆற்றும். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது மட்டும்மல்ல வயிற்றுபோக்கையும் சரிசெய்கிறது. தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடைகாலத்தில் வெளுத்து வாங்குகிறது வெயில். இதைச் சமாளிக்க உதவுபவை ஜூஸ், கூழ், பழங்கள், மோர் போன்றவைதான்.

கோடைக்காலம் தொடங்கியதுமே சாலையோரத்திலும் நடைபாதைகளில் ஃப்ரூட் ஜூஸ், சர்பத், கூழ், தர்பூசணி போன்றவற்றின் வியாபாரம் களைகட்ட ஆரம்பித்துவிடும். நம் தாகம் தணிக்கும் இது போன்ற பானங்களில் கரும்பு ஜூஸுக்கு முக்கிய இடம் உண்டு. அதுவும் குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் கரும்புச்சாறு விற்கும் கடைகள் முன்னெப்போதையும் விட இப்போது அதிகரித்து காணப்படுகின்றன. இப்படி பல நன்மைகளை தரும் கரும்பு ஜூஸ்ஸை பற்றி நாலு பேருக்கு சொல்லுங்களேன்.

newstm.in

Trending News

Latest News

You May Like