1. Home
  2. ஆரோக்கியம்

மின்னும் சருமத்துக்கு  கோடை இயற்கை தந்த கொடை...!


மிரட்டும் கோடைக்கு முதலில் பலியாவது சருமம் தான். முறையாக பராமரிக்கப்படும் சருமங்கள் சூரியனின் வெப்பத்தில் பாதிக்கப்படுகின்றது என்பது தான் பெரும்பாலோனோரின் கவலையாக இருக்கிறது. சரும எரிச்சல், சரும அரிப்பு, அரிப்பினால் வேனிற் கட்டிகள், வேர்க்குரு, சரும அலர்ஜி என்று ஒவ் வொருவருக்கும் ஒவ்வொருவிதமான சருமப் பிரச்னைகள் கோடைக்காலத்தில் ஏற்படுவது இயல்பானது. இந்நிலையில் வெயிலில் வெளியே செல்பவர்கள் சருமப் பராமரிப்புக்கு கூடுதல் கவனம் செலுத்துவதும் அவசியமாகிறது.

பொதுவாகவே கெமிக்கல் கலந்த அழகு க்ரீம்களைப் பயன்படுத்துவது பரவலாக இருக்கிறது. கோடைக்கு என்று பார்க்கும் சன்லோஷன்களையெல் லாம் மாறி மாறி பயன்படுத்துவதும் சருமத்துக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும். முகம், கழுத்து, கைகள் என்று வெயில் படும் இடங்கள் கெமிக்கல் கலந்த சன் லோஷன்களால் ஆரம்பத்தில் சருமத்தை மின்ன செய்தாலும்... நாள டைவில் பொலிவை இழக்கவே செய்யும் என்று சரும நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

சருமத்தைப் பராமரிக்க இயற்கை அள்ளிக்கொடுத்திருக்கும் பொருள்களில் ஒன்று கற்றாழை... அழகுக்கும் உடல் ஆரோக்யத்துக்கும் மருந்தாகவும் என பலவகைகளில் கற்றாழை பயன்படுத்தப்படுகிறது. பக்கவிளைவுகள் இல்லாத அற்புதமான லோஷன் கற்றாழை ஜெல். அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை. இடப்பற்றாக்குறை உள்ள வீடுகளில் கூட சிறிய தொட்டி யில் கற்றாழையை வளர்க்கலாம். தற்போது வாஸ்துவுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் கற்றாழை இடம்பிடித்திருக்கிறது.

கற்றாழையை எடுத்து அதன் மேல் தோலை சிவினால் உள்ளே இருக்கும் நுங்கு போன்ற பகுதிதான் ஜெல் என்றழைக்கப்படுகிறது. அதிகாலையில் குளிப்பதற்கு முன்பு முகம், கழுத்து, கைகளில் இந்த ஜெல்லைத் தடவி குளித்தால் முகத்தில் உள்ள பருக்கள், கட்டிகள் , தேமல்கள் அனைத்தும் மறைந்து வரும்.

இரவு நேரங்களில் படுக்கும் போதும் இந்த ஜெல்லை தடவி படுக்கலாம். ஓய்வு நேரங்களில் கண்களின் உஷ்ணத்தைக் குறைக்க வெள்ளரிக்காய் வைப்பது போல. கற்றாழையை இரண்டாக நறுக்க ஜெல் இருக்கும் பக்கத்தைக் கண்களில் வைத்து ஒற்றி எடுக்கலாம். கண்களில் உஷ்ணம் குறைவதோடு கண்களின் கீழ் உள்ள கருவளையத்தையும் போக்கும்.

கோடையில் வாரம் ஒருமுறை எண்ணெய்க்குளியல் அவசியம். அதேபோன்று கற்றாழை ஜெல்லை தலையில் தேய்த்து ஊறவைத்து அரைமணி நேரம் கழித்து அலசினால் கண்டிஷ்னரின் தேவை இல்லாமல் கூந்தல் பட்டுப்போல் மின்னும். உடல்சூடும் குறையும்.

கற்றாழை ஜெல்லை மிக்ஸியில் இட்டு சாறாக்கி நாட்டுச்சர்க்கரை சேர்த்து அருந்தினால் உடலில் உள்ள உஷ்ணம் நிச்சயம் குறையும். கற்றாழை ஜெல் சிறிது கசப்பு சுவையுடயது என்பதால் மோருடன் சேர்த்து உப்பு போட்டும் குடிக் கலாம்.

தொடர்ந்து ஒரு வாரம் கற்றாழையப் பயன்படுத்தினால் சருமம் மின்னுவதைக் கண்கூடாக பார்க்கலாம். சருமத்தைப் பளீரென வைக்கவும், உடல் உஷ்ணத்தைத் தவிர்க்கவும் பாதிப்புகள் ஏற்படுத்தாத கற்றாழையை இயற்கை அளித்திருக் கிறது.

பிறகு என்ன கோடை வெயிலை கூலா சமாளியுங்க...

newstm.in

Trending News

Latest News

You May Like