1. Home
  2. ஆரோக்கியம்

கீரை + தயிர் = விஷம்..! மீனுடன் சேர்க்க கூடாத பொருட்கள்..!

1

தயிருடன், மீன், கீரைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது.. காரணம், செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை தயிருக்கு நிறையவே உண்டு.. சத்துக்கள் அதிகம் நிறைந்த மீன்களுடன், தயிரை சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் தாமதமடைந்து, சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல் போய்விடும். எனவே, மீன், தயிர் இரண்டையும் தனித்தனியாக சாப்பிடுவதே ஆரோக்கியம் என்கிறார்கள். அதேபோல, மீன்களுடன் முள்ளங்கியை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.. இவைகளை ஒன்றாக சாப்பிட்டால், சளி, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளை தந்துவிடும்.. அதேபோல, திப்பிலியுடன் மீன் சேர்த்து சாப்பிட்டால், குடல் பாதிப்பு வந்துவிடும்.. அதனால், மீன் பொறித்த எண்ணெய்கூட, திப்பிலியுடன் பயன்படுத்தக் கூடாது என்று ஆயுர்வேதத்திலேயே சொல்லியிருக்கிறார்கள்.

பிரியாணியில் நாம் சாப்பிடும் தயிர் வெங்காய பச்சடிகள்தான்.. இந்த பச்சடியை தவிர்க்க சொல்கிறார்கள். காரணம், தயிரை பொறுத்தவரை குளிர்ச்சியை தரக்கூடியது, வெங்காயம் சூட்டை கிளப்பிவிடக்கூடியது.. எதிரெதிர் குணங்களை கொண்டதால், இவைகளை சேர்த்து சாப்பிடுவது அஜீரணத்தை தந்துவிடுகிறது..

அதனால்தான், அசைவத்துடன் வெறும் வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.. ஆனால், தயிரோடு மட்டும் கலந்து சாப்பிடக்கூடாது என்கிறார்கள். அதேபோல, வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது... வாழைப்பழம் சாப்பிட்டதுமே, தயிர், மோர் சாப்பிடக்கூடாது. தேனும், நெய்யும் சேர்த்து சாப்பிடக்கூடாது. வெண்ணெயுடன் காய்கறிகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்து சாப்பிடக்கூடாது.

பாலிலிருந்து தயிர் உருவானாலும் இரண்டையும் ஒன்று சேர சாப்பிடுவது தவறு. அப்படி சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, அசிடிடி உண்டாகும்.

உளுந்தும் தயிரும் சேர்த்து சாப்பிடுவது செரிமானப் பிரச்னையை உண்டாக்கும். அதோடு வாயுத்தொல்லை, வயிற்று மந்தம், வயிற்றுப்போக்கு போன்றவையும் உண்டாகும்.

எண்ணெயுடன் வறுத்த உணவு , பொறித்த உணவு போன்றவற்றை தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. இது செரிமானத்தைக் குறைத்து உடல் உபாதைகளை உண்டாக்கும்.

தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதிய வேளை தான். இரவு நேரத்தில் தயிரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும்.

தயிருடன் நட்ஸ் சேர்த்து சாப்பிடவே கூடாது. ஏனெனில் இவை இரண்டிலுமே புரோட்டீன் அதிகம் இருப்பதால், அது செரிமான மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்.

மீனுடன் தயிருடன் சாப்பிடக்கூடாது.. நல்லெண்ணெய்யில் இறைச்சியில் சமைக்கக்கூடாது.. நாம் சாப்பிட்டதுமே தூங்கக்கூடாது.. உஷ்ணமான உணவை சாப்பிட்டதும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவை சாப்பிடக்கூடாது.. குளிர்ச்சியான கற்றாழை ஜூஸ் குடிக்கிறோம் என்றால், உடனே அன்னாசி, பப்பாளி போன்ற சூடு தரக்கூடிய உணவுகளை சாப்பிடக்கூடாது.

நமக்கு பெரும்பாலான உடல்நல கோளாறுகள் ஏற்பட காரணமே அஜீரணம்தான்.. அதனால், உளுந்து, உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், தயிர், காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற அஜீரணம் தரக்கூடிய உணவுகளை தவிர்த்தாலே போதும்.. சுருக்கமாக சொல்லப்போனால், ஜீரணம் நமக்கு எளிதாகிவிட்டாலே, நோய்கள் அண்டாது.

Trending News

Latest News

You May Like