1. Home
  2. ஆரோக்கியம்

குழந்தையின்மையை போக்கும் மணத்தக்காளி கீரை

குழந்தையின்மையை போக்கும் மணத்தக்காளி கீரை

அடிக்கடி உண்வில் சேர்க்க வேண்டிய கீரை வகைகளில் முதன்மையானது மணத்தக்காளி என்றே சொல்லலாம், இதிலு ள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவப் பண்புகள் காரணமாக அதிகளவில் இந்த கீரை உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

இதனை கறுப்பு மணித்தக்காளி, மிளகு தக்காளி மற்றும் மணல்தக்காளி, சுக்குட்டி கீரை போன்ற மற்ற பெயர்களாலும் குறிப்பிடுவர். இதில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

குழந்தையின்மை பிரச்சனைக்கு நல்ல தீர்வினை இந்த கீரை கொடுக்கிறது. மணித்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், கருப்பையில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி விரைவில் குழந்தை பிறப்பதரற்கான வாய்ப்பினை இந்த கீரை உருவாக்குகிறது.

ஆண்களின் மிகப்பெரிய பிரச்சனையான மலட்டு தன்மையை போக்கும் அற்புத மருந்தாக இந்த கீரை உள்ளது. இதனை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிப்பதுடன், இனப்பெருக்க உறுப்பும் வலிப்பெறும்.

வெயில் காலங்களில் நீர் பற்றாக்குறையால் ஏற்படும் மலச்சிக்கல், சிறுநீர் கழிப்பதில் சிரமம் பொன்ற பிரச்சனகளை நீக்க கூடிய வல்லமை கொண்டது மணித்தக்காளி கீரை.

உடல் சூட்டால் ஏற்படும் கட்டிகள் மற்றும் தோலில் ஏற்படும், எவ்வித அலர்ஜிக்கும் இந்த கீரை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இந்த கீரையின் சாற்றை கட்டி, அல‌ர்ஜி உள்ள இடத்தில் பூசினால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

காய்ச்சல், தொண்டை கரகரப்பு, கை கால் வலி போன்றவற்றை போக்க, இந்த இலை சாற்றிணை தடவி வர குணமடையும்.

காச நோயை குணப்படுத்தும் அருமருந்து, இந்த கீரை மற்றும் அதன் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் காச நோய் குணமாகும்.

கல்லீரல் பத்திக்கப்பட்டவர்கள், ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு மணத்தக்காளி கீரையை வேக வைத்து குடித்து வர, கல்லீரல் பாதிப்பு குறைய அதிக வாய்ப்புள்ளது.

மணத்தக்காளி கீரையை தினமும் உணவில் சேர்த்து வருபவர்களுக்கு, சிறுநீரகங்களில் உருவாகும் கற்கள் கரைவதோடு, சிறுநீரையும் நன்கு பெருக்கும் தன்மை கொண்டது.

இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடலில் ஏற்படும் புற்று நோயை தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like