1. Home
  2. ஆரோக்கியம்

சூப் பிரியர்களே... சூதனமாக இருந்து கொள்ளுங்கள்!

1

நம் பாரம்பரிய சமையலில் ஒன்று ரசம். இந்த ரசத்தின் அடிப்படையில் தோன்றியதே சூப். நம்முடைய மிளகு ரசத்துக்கு இணையான சத்து உள்ள சூப், எதுவுமே இல்லை என்பதே உண்மை. மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்ததுதான் சூப் கலாசாரம், இன்று, இது  ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. ஸ்டார் ஹோட்டல்களில், சாப்பிட ஆரம்பிப் பதற்கு முன்பாக 'ஸ்டார்ட்டர்' என்கிற வகையில் சூப் பரிமாறப்படுகிறது. ஆரோக்கியத்தை முன்னிறுத்தி தயாரிக்கப்படும் சூப்கள், உடலுக்கு நல்லது. சூப், நம் உடம்பில் உள்ள என்சைம்களைத் தூண்டுவதால், செரி மானம் சரிவர நடக்கும். அசிடிட்டியைக் குறைக்கும், பசியைத் தூண்டும். இதுதான் ஹோட்டல்களில் இதை ஸ்டார்ட்டர் என்கிற வகையில் பரிமாறக் காரணம்.

ஆனால், 'அந்தக் கடையில் சூப் டேஸ்ட்டா இருக்கும்’, 'இந்தக் கடையில் 10 வெரைட்டி சூப் கிடைக்கும்’ என்று தேடித்தேடிக் குடிப்பவர்களுக்கு, நல்ல பலன் கிடைக்காது. காரணம், பெரும்பாலான கடைகளில் தயாரிக்கப்படும் சூப்களில் சுவையூட்டிகள் மற்றும் மோனோசோடியம் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் சுவை அதிகமாகும்... அதேசமயம், சத்துக்கள் போதுமான அளவுக்கு  இருக்காது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் வரக்கூடும். ஏற்கெனவே ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடம்பில் உப்பின் அளவு அதிகம் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு அந்த பாதிப்பு அதிகமாகக்கூடும். எனவே, மோனோசோடியம் கலந்த சூப்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்

சர்க்கரை நோயாளிகள், இருமல், ஜலதோஷம், சுவாசக் குழாய் பிரச்னை உள்ளவர்களுக்கும் மிகவும் நன்மை தரவல்லது சூப். சூப்பில் மூன்று வகை உண்டு. கிளியர் சூப் (clear soup), திக் சூப் (thick soup) மற்றும் தீசிஸ் சூப் (thesis soup). தாது உப்புகள் அதிகம் இருக்கும் கிளியர் சூப், உடல்நலக் குறைவால் திட உணவு சாப்பிட முடியாமல் இருப்பவர்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்தைத் தரவல்லது. அதிக விட்டமின்களும் சுவையும் கொண்ட திக் மற்றும் தீசிஸ் சூப்களை அனைவரும் சாப்பிடலாம்.

பொதுவாக சூப் சாப்பிட ஏற்ற நேரம், காலை 11 மணி. அப்போதுதான், இந்த சூப் நம் உடலில் வேலை செய்து, செரிமானத்தைத் தூண்டி அடுத்த வேளைக்கான உணவு எடுத்துக்கொள்ள நம்மை தயார்படுத்தும். பிடித்த சூப்பையே தொடர்ந்து சாப்பிடாமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சூப் எடுத்துக்கொள்வது, எல்லாச் சத்துக்களும் கிடைக்க வைக்கும். 

''வீட்டில் சுகாதாரமான சூழலில் தயாரிக்கப்படும், சுவையூட்டிகள் கலக்காத, எண்ணெய் அதிகம் சேர்க் காத சூப்கள் அளவில்லா ஆரோக்கியம் தரவல்லவை. கடைகளில் வாங்கிக் குடிக் கும் சூப்கள், அதற்கு நேர் மாறானவை. இதேபோல சூப் பவுடர்களை வாங்கி தயாரிக்கப்படும் சூப்களும் ஆபத்தானவையே. இவற்றில் கலர் மற்றும் வேதிப் பொருட்கள் சேர்க்கப்படு வதால், உடல்நலத்துக்கு தீங்கையே தரும். அதுவும் கண்டகண்ட கடைகளில் சூப் வாங்கிக் குடிப்பது ஆபத்தானது. வெளியில் சூப் சாப்பிட ஆசைப்படுபவர் களை, வீட்டில் சூப் பருக வைக்கும் பழக்கத்துக்கு கொண்டு வருவது நல்லது

Trending News

Latest News

You May Like