8 வடிவில் நடப்பதில் இவ்வளவு பலன்களா..?
8 வடிவில் நடப்பதில் இவ்வளவு பலன்களா..?

தற்போதைய காலகட்டத்தில், அனைவருக்கும் தங்கள் உடல் மீதான அக்கறை பெருகி உள்ளது. குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் அப்படி அக்கறை கொள்வதற்கு நேரமும் இருப்பதால் அனைவருமே தங்களால் முடிந்த சிறிய உடற்பயிற்சி அல்லது ஆசனங்களை செய்து வருகிறார்கள்.
சிலர் தங்கள் வீட்டு மொட்டை மாடியுள் எட்டு வரைந்து தினமும் எட்டு போடுகிறார்கள். இப்படி எட்டு போட்டால் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா..?
21 நாள்கள் தொடர்ந்து எட்டு போட்டால் நல்ல பலன்களை உணரலாம் என்கிறார்கள். தினமும் காலை, மாலையில் ஒரு மணிநேரம் வரைந்து வைத்த எட்டின் மேல் எட்டு வைத்து நடப்பதால், உள்ளங்கை விரல்கள் இரத்த ஓட்டத்தால் சிவந்து இருப்பதைக் காணலாம். இதனால் முதுமை விரட்ட்டப்படும். 8 வடிவில் நடப்பதால், அதிக அளவு பிராண வாயு உள்ளே போய் சளித்தொல்லையை நீக்கும்.. தலைவலி மற்றும் மலச்சிக்கலையும் எட்டுவடிவில் நடப்பது தீர்க்கும்.
சிலர் கண் பார்வைத்திறன் கொஞ்சம் குறைந்ததுமே கண்ணாடி அணிந்து இருப்பார்கள். இதனை ஆரம்ப நிலை கண் குறைபாடு எனலாம். அதுவும் எட்டு போடுவதால் சரியாகுமாம். ஹெர்னியா எனப்படும் குடலிறக்க நோயும் போகுமாம். மூட்டுவலி, பாதவெடிப்பு ஆகியவையும் நீங்கி விடுமாம். ஒபிசிட்டி, உடல் பருமன், இரத்த அழுத்தம், இதயநோய், ஆஸ்துமா, கண்நோய், சளித்தொல்லை, முதுகு மற்றும் மூட்டுவலி ஆகியவையும் போய்விடும். ஆனால் எட்டு போடுவதை நிறுத்தாமல் குறைந்தது 21 நாள்கள் செய்தால் இந்த மாற்றத்தை உணரலாம்.
இதுவரை எட்டுவடிவ நடைபயிற்சி செய்யாதவர்கள் எட்டு வைத்துப் பாருங்கள் உங்களுக்கு கிட்டாத நற்பலன்கள் அனைத்தும் கிட்டும்.
newstm.in