கோடையில் மாம்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா !!
கோடையில் மாம்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா !!

பொதுவாகவே நம்மிடையே நிழவி வரும் கருத்து, கோடை காலத்தில் மாம்பழம் சாப்பிட்டால் வெயில் கால நோய்களான உடல் சூடுஅதிகரித்தல், சருமத்தில் கட்டி, போன்ற உபாதைகளை சந்திக்க நேரிடும் என்பதாகும். இதனால் எளிதாக கிடைக்க கூடிய இந்த பழத்தை பலர் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. ஆனால் உண்மை என்னவென்றால், வெயில் கால நோய்களுக்கு சரியான தீர்வை கொடுக்க கூடிய சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது மாம்பழம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
மாம்பழம் தான் பழங்களின் அரசன். இதில் உள்ள அநேக சத்துக்களே இந்த பழத்திற்கு பழங்களின் ராஜா என பெயர் பெற்றுக்கொடுத்துள்ளது.
- கோடை காலத்தில் கண்டிப்பாக மாம்பழங்களை சாப்பிட வேண்டும்.
- கரோட்டின் நிறைந்துள்ள மாம்பழங்கள் வாழ்வின் ஆயுளை நீட்டிப்பதுடன், ஊட்டச்சத்து குறைபாட்டையும் போக்குகிறது.
- வைட்டமின் சி நிறைந்துள்ள மாம்பழங்கள் உடலுக்கு தேவையான ஆன்டி- ஆக்ஸிடன்டுகளை கொடுக்கிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உள் உறுப்புகளின் முறையான இயக்கத்தை ஊக்குவிக்கிறது மாம்பழம்.
- கோடை காலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் மற்றும் பாக்டிரியாக்களின் தாக்குதலை தடுக்கிறது.
- மாம்பழம் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை கரைத்து உடல் பருமன் குறைய உதவுகிறது.
- முடிந்த வரை மற்ற உணவுகளோடு மாம்பழத்தை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
Tags:
Next Story