1. Home
  2. ஆரோக்கியம்

நொறுக் மொறுக் பொரி உருண்டை

நொறுக் மொறுக் பொரி உருண்டை

தினுசு தினுசான நொறுக்குத்தீனிகள் எல்லாம் இப்போது தான்கண்டுபிடிக்கப்பட்டது போல் பலரும் சொல்கிறார்கள்.ஆனால் நமது முன்னோர்கள் விதவிதமான நொறுக்குத்தீனிகளைத் தினுசு தினுசாய் செய்வதில் வல்லவர்கள்..

சத்துமிக்க பொருள்களிலிருந்து அவர்கள் செய்த பலகாரங்கள் எல்லாமே பளபளவென்ற பெயரில் இப்போது மீண்டும் பிறப் பெடுத்திருக்கிறது. கிராமியப்பலகாரங்கள் என்று சொல்லப்பட்ட கருப்பட்டி, வெல்ல பலகாரங்கள் எல்லாம் இன்று நீரிழிவு காரர்களுக்கும் ஏற்றது என்று சொல்லப்பட்டதால் அனைவரது பார்வையும் பழங்கால உணவு பொருள்களின் மீது திரும்பி இருக்கிறது. பெரியவர்கள் மட்டுமல்ல சிறியவர்களையும் திசைதிருப்பியிருக்கிறது.

பொரி என்றாலே புண்ணிய ஆலயங்களுக்கு சென்று வரும் போது பிரசாதம் கொடுக்க பயன்படுத்தும் பொருள் என்ற எண் ணங்கள் வேரூன்ற தொடங்கியநேரம் கிராமங்களைத் தாண்டி இன்றுநகரங்களையும் ஆக்ரமித்துவருகிறது பொரிஉருண்டை. எவ்வளவு சாப்பிட்டாலும் வயிற்றுக்கு வஞ்சனம் செய்யாமல் இருப்பதால் இதன்மீது அலாதி பிரியம் நம் முன்னோர்க ளுக்கு இருந்தது.

இரும்புச்சத்துகொண்ட வெல்லமும்,சத்தான பொரியும் இணைந்து வளரும் குழந்தைகளின் சத்துக்களை குறையாமல் அதிக ரிக்கவே செய்யும். விலை கொடுத்து வாங்கும் மதிப்புமிக்க பீட்ஸாவில் இல்லாத சத்து மலிவு விலையில் வாங்கக்கூடிய எளிமையான பொரி உருண்டை கொடுத்துவிடுகிறது என்ற விழிப்புணர்வை மக்கள் உணர்ந்து வருகிறார்கள். சாட் கடைக ளில் மசாலா பொரியைப் பார்த்ததும் மக்களுக்கு பொரியின் மீது ஆசை திரும்பியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

பொரிஉருண்டை செய்ய கடைகளைத்தேடி ஓட வேண்டியதில்லை. எளிமையான முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம். அதுவும் 15 நிமிடங்களில். எப்படி செய்வது பார்க்கலாமா?

தேவையான பொருள்கள்:

பொரி-5 கப்,வெல்லம்- ஒன்றரை கப், தண்ணீர் – கால் தம்ளர் பச்சரிசி மாவு -3 டீஸ்பூன்.

செய்முறை:

அகன்ற பாத்திரத்தில் கால் தம்ளர் தண்ணீர் விட்டு வெல்லத்தைத் துருவி சேர்த்து பாகுபதம் காய்ச்ச வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரியைக் கொட்டியபடி நன்றாக கலக்க வேண்டும். பொரி முழுவதும் வெல்லப்பாகு கலந்து உருண்டுவரும். அப்போது அரிசி மாவைத்தூவி உருண்டைகளாகப் பிடிக்கவும். தேவையெனில் 2 டீஸ்பூன் நெய் விடலாம்.

குழந்தைகளுக்கு பள்ளியில் கொடுப்பதற்குகடைகளில் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பதை விட வீட்டிலேயே ஸ்நாக்ஸ் செய்து தருவது ஆரோக்யமானது. அதிலும் எளிமையாக செய்யக்கூடிய சத்துமிக்க இந்த பொரி உருண்டைகளை குழந்தைகள் மறு க்காமல் நொறுங்கித் தின்னும் அழகை பார்ப்பதற்கே இன்னும் இன்னும் செய்யலாம் என்று தோன்றுமே….

newstm.in

Trending News

Latest News

You May Like