உடலுறவு நேரத்தை அதிகரிக்க சில எளிமையான வழிகள்..!
உடலுறவுக்கு நேரம் ஒதுக்குதல் என்றால் ஒவ்வொரு வாரமும் காலண்டரில் திட்டமிடுவதல்ல. ஆனால் நீங்கள் உங்கள் இணையுடன் நெருக்கமாக இருக்க நினைக்கும் சமயத்தில் உங்கள் இருவருக்குமிடையே உள்ள சில கவர்ச்சியான நினைவுகளை நினைவூட்டலாம்.
அன்றைய நாளின் ஒரு பகுதியை முழுவதும் உடலுறவுக்காக செலவிடுங்கள். ஏனெனில் உங்கள் பணிகளுக்கு இடையே நீங்கள் உடலுறவை மேற்கொண்டால் அது உங்களை விரைவாக உடலுறவை முடிக்க ஊக்குவிக்கும். இது உங்கள் அனுபவத்தை எதிர்மறையாக பாதிக்கும். எனவே உடலுறவு செய்ய முடிவு செய்து விட்டால் அதற்கான நேரத்தை ஒதுக்குவது நல்லது.
நினைவாற்றல் மற்றும் சுவாச பயிற்சிகளை மேற்கொள்வது மெதுவான விந்தணு வெளியேற்றத்திற்கு உதவுகிறது. இவை தொடர்பான தியானங்களை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது செய்யவும். சாப்பிடும்போது உங்கள் உணவில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி சாப்பிடவும்.
நீங்கள் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும் போது உங்கள் மடிகணினி, தொலைபேசி மற்றும் டிவி போன்ற வேறு விஷயங்கள் மீது கவனத்தை மாற்ற வேண்டாம். இதை போன்ற கவன சிதறல்களை தவிர்க்கவும்.உடலுறவை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அதை நிவர்த்தி செய்யும் விதமாக உடலுறவு இருக்க வேண்டும். உடலுறவு என்பது கண்டிப்பாக புணர்ச்சியை மட்டும் குறிக்கும் வார்த்தையல்ல. அது முத்தம், மசாஜ், சில காம விளையாட்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
உடலுறவுக்கான சக்தி என்பது உங்கள் கால்களில் உள்ளது என நினைத்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் அது உங்கள் மூளை சார்ந்தது ஆகும். உங்களது மனதில் ஏற்படும் சிந்தனைகளை உச்சமடையப்போகும் நேரத்தில் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். உங்கள் சிந்தனையை உடலுறவின் மீது இல்லாமல் வேறு கோணத்தில் திசை திருப்புங்கள்.
உடலுறவின் போது ஏற்படும் விசித்திரமான சிந்தனைகள் உங்களுக்கு அதிக சக்தியை கொடுக்கும். உங்களது உடல் களைப்பின்றி செயல்பட உதவும். இந்த சிந்தனைகள் உங்களுக்கு உடலுறவில் அதீத சக்தியை கொடுத்து உடலுறவில் சிறப்பாக செயல்பட உதவுகிறது. உங்கள் துணையுடன் சென்ற முறை அல்லது எப்போதாவது நடந்த சுவாரசியமான உடலுறவை பற்றி அல்லது நிகழ்வுகளை பற்றி சிந்தனை செய்யுங்கள். அல்லது இப்படி எல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் என்பது பற்றி கற்பனை செய்யுங்கள்.
ஆண்கள் உடலுறவில் குறைந்த நேரம் மட்டுமே ஈடுபட சுய இன்பம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இது டீன் பருவத்தில் தொற்றிக்கொண்ட ஒரு விஷயம். அப்போது உங்களுக்கு இருந்த நேரமின்மை, ஆர்வம், பயம் காரணமாக விரைவில் இன்பமடைய கற்றுக்கொண்டிருப்பீர்கள். அது தான் நீங்கள் விரைவில் உடலுறவை முடித்துக்கொள்ள காரணமாக இருக்கிறது.
சுய இன்பம் தான் நீங்கள் விரைவில் உச்சமடைய காரணம் என்பதால் நீங்கள் தனிமையில் இருக்கும் போது உங்களது சுய இன்ப நேரத்தை நீட்டிக்க முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் உங்களது உடலுறவு கொள்ளும் நேரத்தை அதிகரிக்க படிப்படியாக முயற்சி செய்யுங்கள்.
பாலியல் முன் உணர்தல் என்பது மிகவும் தவறானது. நீங்கள் உடலுறவு சம்பந்தப்பட்ட வீடியோக்களை அதிகமாக பார்ப்பதை தவிர்க்கவும். இவை போலியானவை. பிறரை கவர்வதற்காக உருவாக்கப்பட்டவை. இவை உங்களது வேகத்தை அதிகப்படுத்துவது போல தெரிந்தாலும், உண்மையான உடலுறவில் உள்ள ஈடுபாடு குறையும். உங்களது உடலுறவு நேரமும் குறையும். எனவே இவற்றை அதிகமாக காண்பதை தவிர்க்கவும்.