1. Home
  2. ஆரோக்கியம்

மலச்சிக்கலைத் தவிர்க்க எளிமையான வழிகள்!

மலச்சிக்கலைத் தவிர்க்க எளிமையான வழிகள்!

உலகம் முழுவதுமே நடைமுறையில் இருந்து வருகிற பாஸ்ட் புட் கலாசாரத்தில் இருந்து தமிழக மக்களும் தப்பவில்லை. தமிழகத்தில் இந்த துரித உணவுப் பழக்கத்தினால், 20 வயது மாணவ, மாணவிகளும் கூட மலச்சிக்கலினாலும், மூல நோயினாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியைத் தருகிறது.

மலச்சிக்கல் குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் இந்த விஞ்ஞான யுகத்திலும் நம் மக்களிடையே சரியான தெளிவு இல்லாமல் இருப்பது வேதனை தான். மூல நோய் என்றாலே அருவருப்பாகவும், அது ஏதோ நமக்கு சம்மந்தமே இல்லாததாகவும் பார்க்கும் நிலை தான் இன்று உள்ளது. முறையான உணவு பழக்கங்கள், சரியான பயிற்சி, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவைகளின் மூலமாக எளிதாக மலச்சிக்கலை தவிர்க்கலாம்.

நார்ச்சத்துள்ள உணவு பொருட்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

அசைவ உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வதை தவிர்க்க வேண்டும்

தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது அவசியம். குறைந்த பட்சமாக நாள் ஒன்றுக்கு அரை மணி நேரமாவது

உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள்.

குதிரை வாலி, வேம்பு, நெல்லிக்காய், திரிபலா சூரணம், கண்டந்திப்பிலி, நாகபழம் போன்ற இயற்கையான உணவுப் பொருட்களை உண்பதன் மூலமாகவே மலச்சிக்கலையும், அதனால் உருவாகும் நோயையும் முற்றிலுமாக தவிர்க்கலாம்.

- டாக்டர். வி. ராமசுந்தரம்

newstm.in

Trending News

Latest News

You May Like