சிமிழ் எனப்படும் கேழ்வரகு இனிப்பு லட்டு...

நல்ல சத்துமிக்க கேழ்வரகு வேர்க் கடலை உருண்டை குழந்தைகளுக்கு வலு கொடுக்கும். மிக எளிதாக செய்யக் கூடிய இந்த வேர்க்கடலை கேழ்வரகு உருண்டையைத் தான் தற்போது பிரபலமான இனிப்புக் கடைகளில்...

சிமிழ் எனப்படும் கேழ்வரகு இனிப்பு லட்டு...
X

பாட்டி கால ரெஸிபிகள் எல்லாமே இன்று சற்றே அலங்கரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிட்டது. தானியங்களில் இருக்கும் சத்துக்களை பட்டிய லிடாமல் பக்குவமாக சமைத்து வந்தார்கள். அந்த தானியங்கள் தான் இன்று உடலுக்கு நல்லது என்று அதைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.

மறந்துவிட்ட சத்துமிக்க தானியங்களில் கேழ்வரகும் ஒன்று.அன்றாடம் வயலில் வேலை செய்பவர்களுக்கு சத்தும் வலுவும் கொடுக்க கூடிய பானம் கேழ்வரகு கூழ். குழந்தைகளுக்கு கேழ்வரகில் செய்த புட்டு, அடை என்று வித விதமாக செய்து கொடுத்தார்கள். குழந்தைகளும் ஆரோக் யம் குன்றாமல் வளர்ந்தார்கள்.

மாலை நேரத்தில் கேழ்வரகு சத்துக்கள் உடலில் சேரும்அளவுக்கு நொறுக்கு திண்பண்டங்களைச் செய்துகொடுத்தார்கள். அவற்றில் ஒன்று சிமிழ் என்றழைக்கப்படும் கேழ்வரகுசத்து உருண்டை. ஒருவாரம் வரை கெடாமல் இருக்கும் இந்த உருண்டையைக் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார் கள்.

தேவைக்கு:
கேழ்வரகு மாவு- 2 கப், வெல்லம் – 3 கப், வறுத்த வேர்க்கடலை- 1 கப், உப்பு – 1 சிட்டிகை, தண்ணீர் - எண்ணெய் தேவைக்கு,

செய்முறை:
கேழ்வரகு மாவை சுத்தம் செய்து உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு சற்று தளர பிசையவும். வறுத்த வேர்க்கடைலையைத் தோல் நீக்கி மிக் ஸியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். வெல்லத்தைப் பொடியாக்கி நறுக்கி வைக்கவும்.

கேழ்வரகு மாவை மெல்லிய துணியில் அடையாகத் தட்டி, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். எல்லா அடைகளை யும் தட்டி முடித்ததும், சூடு ஆறுவதற்கு முன்பு மிக்ஸியில் இட்டு ஒரு சுற்று சுற்றி வெல்லத்தூள் சேர்த்து அரைக்கவும். (முன்பு உரலில் இட்டு வெல்லம் சேர்த்து இடிப்பார்கள். இப்போது மிக்ஸி தான் என்பதால் மிக்ஸியிலேயே அரைக்கலாம்)

வெல்லமும் அடையும் சேர்த்து நன்றாக அரைத்ததும் அகன்ற பாத்திரத்தில் போட்டு பொடித்த வேர்க்கடலைச் சேர்த்து நன்றாக கலக்கவும். கைக ளில் தண்ணீர் தொட்டு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

குழந்தைகளுக்கு நொறுக்கித்தீனியாக கொடுக்கலாம். நல்ல சத்துமிக்க கேழ்வரகு வேர்க்கடலை உருண்டை குழந்தைகளுக்கு வலு கொடுக்கும். மிக எளிதாக செய்யக் கூடிய இந்த வேர்க்கடலை கேழ்வரகு உருண்டையைத்தான் தற்போது பிரபலமான இனிப்புக் கடைகளில் சிமிழ் என்னும் பெயரில் அதிக விலையில் விற்பனை செய்கிறார்கள்.

வாரந்தோறும் இல்லையென்றாலும் மாதம் ஒருமுறையாவது செய்யுங்களேன்.

newstm.in



newstm.in

Next Story
Share it