1. Home
  2. ஆரோக்கியம்

முதுகுவலிக்கு பை பை சொல்லுங்கள்...

முதுகுவலிக்கு பை பை சொல்லுங்கள்...

முன்பெல்லாம் கடுமையான எடையைக் கொண்ட மூட்டை தூக்குபவர்களுக்குத்தான் முதுகுவலி கழுத்துவலி வரும் என்று சொல்லிக் கொண்டி ருந்தார்கள் ஆனால் இப்போது அப்படி அல்ல. ஏஸி அறையில் உட்கார்ந்து வேலை செய்தாலும் முதுவலி வரும் என்கிறார்கள்.

தற்போது 40 % மக்கள் முதுகுவலி அவஸ்தையால் பாதிக்கப்படுகிறார்கள். முதுகுவலிக்கு காரணமாக மருத்துவர்கள் முதுகெலும்பில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் அல்லது நோய்த்தொற்று கிருமிகள் இருந்தால் உண்டாகும் என்று சொல்கிறார்கள். அதையும் தாண்டி அவர்கள் சொல்லும் காரணமே இன்று பெரும்பாலோனோருக்கு முதுகுவலி உண்டாகிறது எனலாம். அப்படி என்னதான் சொல்கிறார்கள் பார்க்கலாம்.

உணவு குறைப்பாடு:
உணவில் போதிய அளவு வைட்டமின் சத்துக்கள் இல்லாததும் ஒரு காரணம். அதிக அளவு புரதம் மற்றும் கொழுப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர்பானங்களை அதிகம் குடித்தால் எலும்புகளின் உறுதி குறைந்துவிடும் வாய்ப்பு உண்டு. மேலும் கால்சியம் பற்றாக் குறையாலும் எலும்புகள் அடர்த்தி குறைந்துவிடுவதால் முதுகுவலி தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.

எதிலும் கவனமின்மை:
அதிக உடல் உழைப்பு முதுகுவலி ஏற்பட முதல் காரணம். அதிக உழைப்பின் காரணமாக தசைகள், தசை கால்கள், தசைபிடிப்புகள் உண்டாகிறது. இருசக்கரவாகனங்களில் நெடுந்தொலைவு பயணிக்கும் போது குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளில் வேகமாக பயணிப்பதும் ஒரு கார ணம். உடல் எடைக்கு மீறிய எடையை குனிந்தபடி தூக்கி வேகமாக நிமிர்வதும் அதை முறையற்ற முறையில் தூக்கி நிமிர்த்துவதும் முதுகு வலிக்கு காரணமாக அமைகிறது. மேலும் தூங்கும் போது கோணலாக படுப்பதும் கூட உடலில் ஒரு வித அசெளரியத்தை உண்டாக்கி முதுகு வலியை உண்டாக்குகிறது.

முதுகுவலிக்கு பை பை சொல்லுங்கள்...

அதிக நேரம் உட்கார்ந்திருப்பது:
தற்போது உலகமே கணினி மையமாகிவிட்டது. கணினியுடன் நாளைக் கழிப்பதில் தான் பலருக்கும் விடியலே தொடங்குகின்றது, 2 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தால் கால் தசைகளின் இயக்கம் நின்று விடுகிறது. நல்ல கொழுப்புகளின் அளவும் குறைய தொடங்குகிறது. ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து பணி செய்பவர்களை விரைவில் எட்டிவிடுகிறது முதுகுவலி.

தீர்வுகள்:
சரிவிகித சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது கால்சியம் அதிகமுள்ள முருங்கைக்கீரை, பால், முட்டை, மீன், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று ஒருவேளையாவது இடம்பெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
நாற்காலியில் அமரும் போது குறைந்த நேரமே என்றாலும் முதுகின் கீழ்பகுதி நாற்காலியில் சாய்ந்தபடி நிமிர்ந்து உட்கார வேண்டும். கணினியில் பணி புரிந்தாலும் கழுத்துப்பகுதியும் கணினியின் திரையும் நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
பயணங்களின் போது வெகு கவனமாக பள்ளங்கள் மிகுந்த சாலையைக் கடக்க வேண்டும். பயணித்த பிறகு கை, கால்களை உதறி உறுப்புக ளுக்கு அசைவு கொடுக்க வேண்டும். உறங்கும் போதும் பக்கவாட்டில் படுத்து உறங்கலாம். குப்புறப்படுத்தோ அல்லது கால்களை உயரமான இடங்களின் மீது வைத்தோ படுப்பதும் சரியானதல்ல.

இதையெல்லாம் முறையாக கடைப்பிடித்தால் முதுகுவலிக்கு பை பை சொல்லலாம். இதனால் வரக்கூடிய நோய்களையும் தவிர்த்துவிடலாம்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like