இளமையை பாதுகாத்து ஆரோக்கியம் தரும் உப்பு குளியல்!

உப்பு குளியலை நோய் அறிகுறிகளின் தொடக்கத்தில் எடுத்துக் கொண்டால் காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றைத் தடுக்கலாம். இந்த உப்புகள் மலிவானவையகவும் மற்றும் உள்ளூர் மருந்து கடைகளில் கிடைக்க கூடியதாகவும் இருக்கிறது.

இளமையை பாதுகாத்து ஆரோக்கியம் தரும் உப்பு குளியல்!
X

வாசனை திரவியங்களால் செய்யப்படும் சோப்பு, சந்தானம், வேம்பு, ரோஜா உள்ளிட்ட மருத்துவ குணமிக்க சோப்புகளை பற்றி கேள்வி பட்டிருப்போம். இங்கு நாம் பார்க்கப்போவது மன அழுத்தம் முதல் உடல் வலி வரை அனைத்து பிரச்னைகளுக்குன்ம் தீர்வாக அமைய கூடிய மெக்னீசியம் சல்பேட் அல்லது கடல் உப்பு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் குளியல் உப்பு குறித்து தான்.

உப்பு குளியலை நோய் அறிகுறிகளின் தொடக்கத்தில் எடுத்துக் கொண்டால் காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றைத் தடுக்கலாம். இந்த உப்புகள் மலிவானவையகவும் மற்றும் உள்ளூர் மருந்து கடைகளில் கிடைக்க கூடியதாகவும் இருக்கிறது.

உப்பை தேய்த்து குளியல் மேற்கொள்வதால் வியர்வை மூலம் உப்பு தோல்களின் துளைகள் வழியாக அமிலக் கழிவுகளை வெளியேற்றி வலியைக் குறைக்கின்றன. குளியல் உப்புகள் உடல் சமநிலையையும் ஒட்டுமொத்த ஆரோக்யத்தையும் பராமரிக்க உதவுகின்றன.

இளமையை பாதுகாத்து ஆரோக்கியம் தரும் உப்பு குளியல்!

அவற்றில் நல்ல அளவு மெக்னீசியம், சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் மற்றும் தாதுக்கள் உள்ளன. சரும ஆரோக்யத்தை மேம்படுத்துவதற்கும், தோல் பிரச்னைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், அதே நேரத்தில் சருமத்தின் இயற்கையான பாதுகாப்புத் தடையை மேம்படுத்துவதற்கும் தாதுக்கள் அவசியம். இறந்த சரும செல்களை நீக்கி உடலை புத்துணர்சியோடும் பளபளப்போடும் பாதுகாக்க இந்த குளியல் உப்புகள் உதவுகின்றனர். குளியல் உப்புகள் இளமை அழகை பாதுகாக்கிறது. வயதான தோற்றத்தை போக்க உதவுகிறது.

குளியல் உப்புகளின் அற்புதமான நன்மைகள்:

இளமையை பாதுகாத்து ஆரோக்கியம் தரும் உப்பு குளியல்!

தசை மற்றும் மூட்டுகளில் ஏற்படும் கடினமான வலி, கீழ்வாதம், தோலில் ஏற்படும் அழற்சி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க குளியல் உப்புகள் உதவக்கூடும்.

குளியல் உப்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை சமப்படுத்துகின்றன, அதோடு சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

இறந்த சருமத்தை அகற்றி மென்மையான சருமத்தை கொடுக்க கூடியதாக குளியல் உப்பு இருக்கிறது.

குளியல் உப்பை தலையில் தேய்த்து குளித்து வர தலையில் பொடுகு மற்றும் பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்க முடியும்.

முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை தடுக்க குளியல் உப்புகள் உதவுகின்றன.

குளியல் உப்பை பயன்படுத்தும் முறை :

இளமையை பாதுகாத்து ஆரோக்கியம் தரும் உப்பு குளியல்!

500 கிராம் குளியல் உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைத்து குளியலை மேற்கொள்ளலாம். உப்பு குளியலின் போது மற்ற சோப்புக்கள் மற்றும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

குளியல் உப்பை தொடர்ந்து பயன்படுத்துவதால் சிறந்த நன்மைகளை பெற முடியும்.

அதோடு வயதானவர்கள் 225 கிராம் பயன்படுத்த வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம், இதய சம்மந்தமான பிரசனைகள் உள்ளவர்கள் குளியல் உப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.

newstm.in

newstm.in

Next Story
Share it