1. Home
  2. ஆரோக்கியம்

த‌லை சுற்றுகிறதா? அப்போ இதையெல்லாம் சாப்பிடுங்க!

த‌லை சுற்றுகிறதா? அப்போ இதையெல்லாம் சாப்பிடுங்க!

குறைந்த ரத்த அழுத்தத்திலிருந்து ஹார்மோன் மாற்றங்களால் மதாவிடாய் சமயங்களில் பெண்களுக்கு அடிக்கடி தலைசுற்றல் ஏற்படும். திடீரென ரத்த அழுத்தம் குறைவதால் தலை சுற்றி சுய நினைவு இழப்பு உண்டாகும் .

தலை சுற்றுவதற்கு ரத்த சோகையும் ஒரு காரணமாக இருக்கலாம். சாப்பிடும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளின் பக்கவிளைவுகளால் தலை சுற்றல் உண்டாகும். உடலில் நீரிழப்பு ஏற்படும்போது தலை சுற்றல் ஏற்படும். உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட் குறைவதால், மூளையில் சரியான தகவல் பரிமாற்றம் நடக்காமலிருக்கும்போது தலைசுற்றல் உண்டாகும்.

நம் காதில் உள்ள சிறிய எலும்புகள்தான் நாம் தலையை-உடலை பல்வேறு விதமாக ஆட்டும்போது நமது உடலை சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன. இந்த எலும்புகளில் பிரச்னை என்றாலும் கூட தலைசுற்றல் வரும்.

தலை சுற்றலை தடுக்கும் வழிமுறைகள்:

உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும், அதிகக் கொழுப்புள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.ச‌ரியான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம் , ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்தச் சர்க்கரை அளவுகளை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்.போதை பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும்

துவர்ப்புச்சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே நல்ல பலன் கிட்டும் , கொத்தமல்லி விதையை கொதி நீரில் போட்டோ அல்லது துவையல் செய்தோ சாப்பிட்டால் தலைசுற்றல் குறையும்.

சீரகத்தை வெறும் வாயில் போட்டு மென்று அதன் சாற்றை விழுங்கினால் நல்ல பலன் கிடைக்கும் , இஞ்சி சாறு தேன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, மயக்கம் , தலைசுற்றல் சரியாகும்.

தொந்தரவு தொடர்ந்து நீடிக்குமேயானால் மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது. ஏனெனில் மூளையில் ஏற்படும் பிரச்ச‌னைகளால் கூட தலைசுற்றல் ஏற்படலாம்.

newstm.in

Trending News

Latest News

You May Like