1. Home
  2. ஆரோக்கியம்

வாய்ப்புண்ணிற்கான காரணமும் , தீர்வும்:

வாய்ப்புண்ணிற்கான காரணமும் , தீர்வும்:

.பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம் காணப்படும்.

அதுதவிர வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும்.

வாய்ப்புண் வர காரணம் :

இரைப்பையில் புண் உள்ளோருக்கு, அங்கே சுரக்கிற அதீத அமிலம் தூக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்

நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும். இதனால் ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும். இதன் விளைவாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வாய்ப்புண் வரும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால் இவர்களுக்கு வாய்ப்புண் வருகிறது. அடுத்து, இவர்கள் சாப்பிடும் கருத்தடை மாத்திரைகளும் வாய்ப்புண் ஏற்படக் காரணமாகின்றன.

வாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும் முக்கியக் காரணம்தான். உணவு ஒவ்வாமை - அவற்றில் செயற்கை வண்ண உணவுகள் ,மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணங்களாகக் கூறலாம்.



எவ்வாறு சரிசெய்யலாமம்:

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழம் மற்றும் ஜூஸ் குடிக்கலாம். வெது வெதுப்பான தண்ணீரில் சிறிதளவு உப்பு போட்டு வாய் கொப்பளிக்கலாம். இது வாய் புண் சீக்கிரம் குணமாக உதவுகிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறு மஞ்சள் துண்டுகள் சாப்பிட்டு வந்தால் வயிற்று மற்றும் வாய் புண் குணமடையும். புதினா இலையை அரைத்து அதன் சாற்றை தடவினால் வலி மற்றும் எரிச்சல் குணமாகும்.

உடல் சூடினால் ஏற்படும் வாய்ப்புண்ணை சரிசெய்ய இளநீர் அருந்தலாம். புளிப்பு சுவையுடைய தயிர் ,மோர், உணவில் சேர்த்து கொள்ளலாம். துளசி இலைகளை சாப்பிடலாம்.

மணத்த தக்காளி இலைகளை பச்சையாகவோ அல்லது , நெய்யுடன் சேர்த்து வதக்கி துவையல் செய்து சாதத்துடன் சேர்த்தோ சாப்பிட்டலாம்.

கோவைக்காயை வாரம் இரண்டு நாள் உணவில் சேர்த்து கொள்ளலாம் அல்லது கோவைக்காயை மோருடன் அரைத்து குடித்தாலும் வாய்புண் குண்மாகும்.

தினமும் மூன்று வேலை கொய்யா இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வந்தால் வாய் புண் குணமாகும். வாழை பூ உணவில் சேர்த்து கொண்டால் வயிற்று புண் மற்றும் வாய் புண் குணமாகும்.

பின் குறிப்பு:

வாய் புண் இருக்கும் நேரங்களில் மீன், இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது உடலில் அமில தன்மையை அதிகபடுத்துகிறது இதனால் வாய்ப்புண் குணப்படுத்துவதும் தாமதமாகி விடுகிறது.

மேலும் காரம் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளக் கூடாது. வாய்ப்புண் அதிகமாக இருந்தாலோ அல்லது கடுமையான வயிற்று வலியுடன் , சேர்ந்து வாய்ப்புண் ஏற்பட்டாலோ மருத்துவரை அணுகுவது நல்லது.

newstm.in

Trending News

Latest News

You May Like