காலம் கடந்த கர்ப்பம்... என்ன செய்ய வேண்டும்?

காலம் கடந்த கர்ப்பம்... என்ன செய்ய வேண்டும்?

காலம் கடந்த கர்ப்பம்... என்ன செய்ய வேண்டும்?
X

இன்றைய காலத்தில் பெண்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பின்னர் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்து வருகின்றனர் .அவ்வாறு நல்ல நிலை வருவதற்குள் பெண்களுக்கு குறைந்தது 35 வயதிற்கு மேல் ஆகிவிடுகிறது. இவ்வாறு 35 வயதிற்கு மேல் ஆன பின்னர் சிலருக்கு கருத்தரிப்பில் பிரச்சனை ஏற்படுகிறது. அதுபோக கர்ப்பமான பின்பு நிறைய சிக்கல்கள் உருவாகிறது.பின் அது குழந்தை அல்லது தாயின் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கிறது ஆகவே எப்போதும் குழந்தை பெற்றுக் கொள்வதை மட்டும் தள்ளி வைக்கக்கூடாது.

35 வயதிற்கு மேல் கர்ப்பமாவது மிகவும் கஷ்டம் என்று நினைக்க வேண்டாம். 35 வயதிற்கு மேல் சில நடைமுறைகளை பின்பற்றினால் எளிதில் கருத்தரிப்பது ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்கலாம். அதிலும் சரியான மருத்துவரின் ஆலோசனை மற்றும் உடல் ஆரோக்கிய பராமரிப்புகள் மூலம் எவ்வளவு வயதானாலும் பிரச்சனையின்றி குழந்தைகளை பெற்றெடுக்க முடியும் போது 35 வயதிற்கு மேல் குழந்தைகளை பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய சில முக்கியமான வழிமுறைகளை பின்பற்றினால் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கலாம்.

எப்போதும் நல்ல ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ள வேண்டும் அதிலும் குறிப்பாக இறைச்சி ,மீன் ,பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் கருமுட்டையின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் மேலும் தினமும் 2 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும் ஃபாஸ்ட் புட் ,ஜங்க் ஃபுட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் அதற்கு பதிலாக பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் முன் குறைந்தது மூன்று மாதத்திற்கு போலிக் ஆசிட் மாத்திரைகள் அல்லது உணவுகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு இது மிகவும் இன்றியமையாதது அதுமட்டுமல்லாமல் இந்த போலிக் ஆசிட் குழந்தையின் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

குறிப்பாக இந்த போலிக் ஆசிட் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது மருத்துவரை அணுக வேண்டும். குழந்தை பெற வேண்டும் என்று நினைத்தால் அதற்கு முதலில் சரியான நேரத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும் அதற்கு ஓவுலேசன் கால்குலேட்டரை பயன்படுத்தினால் எப்போது உறவு கொண்டால் கர்ப்பம் ஆக கூடும் என்பதை சொல்லும் அந்த காலத்தில் உறவு கொண்டால் எளிதில் கருத்தரிக்கலாம்.

35 வயதிற்கு மேல் கருத்தரிக்க நினைக்கும் முன் முதலில் மருத்துவரை சென்று அவர்களிடம் உடல் முழுவதும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் கருத்தரிக்க வாய்ப்புள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை கேட்டறிந்து அதற்கேற்றாற் போல் நாம் நடந்து கொள்ள வேண்டும். இதனால் நாம் 35 வயதிற்கு மேலும் கருத்தரிக்கலாம்.

newstm.in

Next Story
Share it