1. Home
  2. ஆரோக்கியம்

மனதே ரிலாக்ஸ் ப்ளீஸ்...

மனதே ரிலாக்ஸ் ப்ளீஸ்...

மனித மனம் விசித்திரமானது. ஒரு பிரச்னையை முடித்து அக்கடா என்று உட்காரும் போது அடுத்த பிரச்னையைப் பற்றிய யோசனையில்நம்மை தள்ளிவிடும். இ.எம்.ஐ கட்டுவதில் தொடங்கி இ.பி.பில் கட்டுவது வரை அன்றாடம் ஒரு போராட்டம் தான்.

பிரச்னைகளைக் கண்டு ஓடி ஒளிபவர்களுக்கு மேலும் மேலும் பதட்டத்தைக் கொடுத்து எப்போதும் ஒருவித டென்ஷனிலேயே வைத்திருக்கும். இப்படி பாதிக்கப்படுபவர்கள் நம்மில் அநேகம் பேர். இன்னும் சிலர் பிரச்னைகளைக் கண்டு ஓடிவிடாமல் தைரியமாக எதிர்க்கிறேன் என்று துணிந்து நிற்பார்கள். ஆனால் மூளை ஒத்துழைத்தாலும் மனதின் ஓரத்தில் பிரச்னைகள் படம் போல் ஓடிக்கொண்டிருக்கும் இவர்களும் ஒரு வகை.

சிலர் இருக்கிறார்கள். மனம் போன போக்கில் விட்டு குழம்பிய மனத்தை தெளிய வைத்து பிறகு வெற்றி பெறுவார்கள். ஆனால் இத்தகைய அறி வாளிகளுக்கு பொறுமை வேண்டும் என்பதால் இந்த ரகங்களில் மனிதர்களைக்காண்பது அரிது. ஆனால் கொஞ்சம் முயன்றால் இந்த அரிய பட்டி யலில் நீங்களும் இடம்பிடித்துவிடலாம்.

ரிலாக்ஸ் ப்ளீஸ்:
தியானம் செய்தால் போதும் மன அழுத்தம் ஓடிவிடும். கண்களுக்குள் தெரியும் உருவத்தைக் குவித்து மையப்புள்ளியை கொண்டு வந்து மனதை ஒரு புள்ளியில் செலுத்துங்கள் இப்படியெல்லாம் செய்தால்தான் மன அழுத்தம் குறைந்து ரிலாக்ஸ் ஆவீர்கள் என்று உங்களை மேலும் அழுத்தத் துக்கு உள்ளாக்க விரும்பவில்லை.

மாறாக சின்னச் சின்ன விஷயங்களை செய்தாலே டென்ஷனைக் குறைக்கலாம். கதவைத்திறந்தால் காற்றுவரும் என்பது போல் மனதில் இருக் கும் அழுக்கு மூட்டைகளை சற்றே ஓரங்கட்டி வைக்காமல் எடுத்து தூர எறியுங்கள்.

எப்போதும் வீட்டில் பிரச்னைகளைப்பற்றி அலசாமல் கொஞ்சம் காற்றாட வெளியில் நடந்து சென்று வாருங்கள். இயன்றால் குடும்பத்தோடு வாரம் ஒருமுறை கோவில், பார்க், பொழுது போக்கு இடங்கள் குறைந்தது சூப் ஐஸ்க்ரீம் கடைக்காவது குழந்தைகளோடு சென்று வாருங்கள்.
எப்போதும் இதற்கு என்ன செய்வது அதற்கு என்ன செய்வது என்று மண்டையை உருட்டிகொள்ளாமல் அதன் போக்கில் விட்டுவிட பழகுங்கள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் எண்ணங்கள் தான் தீர்மானிக்கின்றன. எனவே பார்ப்பவை கேட்பவை எல்லாமே நல்லனவாகவும் நன்மையாகவுமே இருத்தல் மனதுக்கு மிகவும் நல்லது. ஒரு மில்லிமீட்டருக்கு மேல் சிரிக்காத கடுவன் பூனையாக இல்லாமல் மனம் விட்டு சிரிக்க பழகுங்கள். சிரிப்பு எல்லாவற்றையும் நீக்கும் அருமருந்து. சிரிக்க சிரிக்க பேசினாலே துக்கம் பறந்துவிடும் என்பது உளவியலாளர்களின் கருத்து.

சின்ன பிரச்னையாக இருந்தாலும் மனதை அழுத்தி ஏற்காமல் வரும்போது பார்க்கலாம் என்று உரக்க சொல்லிக்கொள்ளுங்கள். உங்களை மீறி நடப்பவற்றைக் கூட என்ன நடந்தாலும் நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லனவாகட்டும் என்று நினைத்து மனதில் சுமை களை ஏற்றுகொள்ளாமல் வாழ பழகுங்கள். குறிப்பாக பணியிடங்களிலும் இப்படியே இருக்க பழகுங்கள்.

பிறகு என்ன எப்போதும் நீங்கள் ரிலாக்ஸ் வாசிகள் தான்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like