1. Home
  2. ஆரோக்கியம்

தாம்பத்தியத்திற்கு முன் பெப்பர்மின்ட் சூவிங்கம் ஆகவே ஆகாது..!! ஏன் தெரியுமா ?



நம்முடைய உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டாலே தாம்பத்திய வாழ்க்கை மிக சிறப்பாக அமையும். அதில் குறிப்பாக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் தினமும் குறைந்தது அரைமணி நேரமாவது வியர்வை வரும் அளவிற்கு உடற்பயிற்சி செய்வதும், நீச்சல் செய்வதும் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். இதயம் வலுப்பெறும் இதையும் வலுப்பெற்றால் சாதாரணமாகவே தாம்பத்ய வாழ்க்கையில் அதிக ஈடுபாடு இருக்க செய்யும். காரணம் சீரான ரத்த ஓட்டமே.

ஒரு சிலர் தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பார்கள் இது போன்றவர்கள் அதிக ஈடுபாட்டுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட ஒருசில உணவுப் பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதில் குறிப்பாக கடல் சிப்பி, அவகேடோ, வாழைப்பழம், பாதாம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தாம்பத்தியத்திற்கு முன் பெப்பர்மின்ட் சூவிங்கம் ஆகவே ஆகாது..!! ஏன் தெரியுமா ?

  • படுக்கைக்கு செல்லும் முன் செலரியை பச்சையாக உண்டு வந்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதே போன்று கடல் சிப்பி கடல் சிப்பி விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும்.
  • நார்ச்சத்து, புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
  • பருப்பு வகைகள், முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், வேகவைத்த மாமிசம் ஆகிவற்றைச் சாப்பிடலாம்.
  • முருங்கைக் காய், அவரை, உள்ளிட்டவற்றைச் சாப்பிடுவது நல்லது. பால் அருந்தலாம்.
  • எளிதாக கிடைக்கக்கூடிய பூண்டு மற்றும் அத்திப் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். பூண்டில் உள்ள அல்லிசின் ஆண் உறுப்புக்கு இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும். இதன்மூலம் தாம்பத்திய உறவில் அதிக நேரம் ஈடுபட வழிவகை செய்யும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள் :-

  • ​​​​​​​மசாலா உணவுகளைக் கட்டாயம் தவிக்க வேண்டும்.
  • கஃபைன் பானங்களான டீ, காப்பி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  • புதினா உடலுக்கு நன்மை தரக்கூடியதுதான் என்றாலும் படுக்கைக்கு போகும் முன்பாக அதை தவிர்க்கவேண்டும்.
  • ஜின், சோடா போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும்.இது டெஸ்டோடிரன் ஹார்மோன் சுரப்பை குறைப்பதோடு விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்குமாம்.
  • எண்ணையில் பொறித்த பதார்த்தங்கள் சாப்பிடுவது தவறு. அதை படுக்கைக்கு போகும் முன் தவித்து விடுங்கள். அதில் உள்ள கொழுப்புச் சத்து உங்கள் செக்ஸ் ஹார்மோன் லெவலை குறைத்துவிடுமாம்.
  • சோயா பாலில் இருந்து செய்யப்படும் டோஃபு உணவுகளை கண்டிப்பாக தவித்து விடுங்கள்.
  • சுவாச புத்துணர்ச்சிக்காக சிலர் சூவிங்கம் மெல்லுவார்கள். பெப்பர்மின்ட் சூவிங்கம் ஆகவே ஆகாது என்கின்றனர். இது செக்ஸ் ஹார்மோன் லெவலை கட்டுப்படுத்துமாம்.
  • ஒரு கப் ஒயின் சாப்பிட்டால் உறவு ஆர்வம் அதிகரிக்கும் என்று கூறி அதை சாப்பிடுவார்கள். அது தவறு. இதன் மூலம் தாம்பத்ய உறவில் தடுமாற்றம்தான் ஏற்படும்.
  • இரவு நேரத்தில் கீரைகள், ஓட்ஸ் சாப்பிட வேண்டாம். இது உடம்பில் கிளர்ச்சியை குறைத்து விடும். காரணம் இதில் உள்ள அதீத நார்ச்சத்துதானாம்.
  • இரவு உணவுக்குப் பின்னர் ஸ்ட்ரா பெரி உள்ளிட்ட பழங்களை சாப்பிட வேண்டாம். இது உணவு ஜீரணிக்கும் தன்மையை பாதிக்குமாம். பழங்கள் சாப்பிட வேண்டுமானால் இரவு உணவுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்துக் கொள்ளலாம்.
  • கார்பனேடட் பானங்களான பெப்சி, கோக் உள்ளிட்ட பானம் அருந்துவதை தவிக்கவும்.அதில் உள்ள சர்க்கரை செக்ஸ் ஹார்மோன் அளவை குறைத்து கிளர்ச்சியை தடுத்து விடுமாம்.

எனவே மேற்கண்ட உணவுகளை தவிர்ப்பதன் மூலம் படுக்கைறையில் உற்சாகத்தை அதிகரிக்கலாம்.

Trending News

Latest News

You May Like