இந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 50% வரை குறைவு..!

நாம் மறந்த உணவுகளாலேயே நாம் உணவுக்கு பின் மருந்து, மருந்துக்கு பின் உணவு என்ற ஆரோக்கியமற்ற வாழ்வை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால், குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, சோளம் போன்ற சிறு தானிய உணவுகள் ஆரோக்கியத்தை கொடுக்க கூடியது. மேலும், இவை உங்களை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
இரத்த சோகை:
சிறுதானியங்களில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால் இது இரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது. இந்த சிறு தானியங்களில் கால்சியம் உள்ளதால் இது எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.
தூக்கமின்மை:
சிறுதானியங்கள் தூக்கமின்மை குறைபாட்டினால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. நல்ல தூக்கம் இல்லை என்று புலம்புபவர்கள் இரவில், ஒரு டம்ளர் அளவு சிறுதானியங்களை கொண்டு செய்யப்பட்ட கஞ்சிகளை குடிக்கலாம் அல்லது இரவில் சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக நிம்மதியான ஆழந்த தூக்கத்தை பெறலாம்.
விட்டமின் பி:
சிறுதானியங்களில் உள்ள விட்டமின் பி, கார்போஹைட்ரைடுகள் மற்றும் கொழுப்புகளை ஆற்றலாக மாற்றம் செய்ய உதவியாக உள்ளது. இதனால் கொழுப்பு கட்டிகள் வருவது குறைக்கப்படுகிறது.
உடல் எடை குறைய:
இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ள காரணத்தில் இது அடிக்கடி பசியாவதை தடுப்பதன் மூலமாக அதிகமாக சாப்பிடுவதையும் கட்டுப்பாட்டில் வைத்து நீங்கள் எடையை குறைக்க உதவியாக இருக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த சிறுதானிய உணவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
புற்றுநோய்:
சிறுதானிய உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 50% வரை குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
தாய்ப்பாலை அதிகரிக்கிறது:
கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்பாலூட்டும் பெண்கள் தங்களது உணவில் கேழ்வரகினை சேர்த்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பால் அதிகரித்து, குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பாலை கொடுக்க உதவுகிறது.
முடி பிரச்சனைகளுக்கு தீர்வு:
இவை முடி உதிர்வதை தடுப்பதுடன் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது. இதனால், நீங்கள் நீண்ட கூந்தலை பெறலாம். மேலும், சிலருக்கு இள வயதிலேயே நரைமுடிகள் ஏற்படுகின்றன. இவர்கள் தொடர்ந்து சிறுதானியங்கள் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நரைமுடி பிரச்சனைகளுக்கு உதவுகிறது.
சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்:
சிறுதானியங்கள் உடலில் ஓடும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலமாக சருமத்தில் முகப்பருக்களை வருவதை தடுக்க உதவுகிறது. மேலும் சருமத்தில் வரும் சுருக்கங்களை சரி செய்யவும், தடுக்கவும் உதவியாக உள்ளது. இத்தகைய சிறுதானியங்களை ஏதேனும் ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உங்களது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தலாம்.