மக்களே உஷார்..! சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருக்கா ?
நம்முடைய ஆயுர்வேத உணவு முறையானது, இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, கசப்பு மற்றும் துவர்ப்பு என சுவைகளை அடிப்படையாக கொண்டது. அதாவது, ஒருவர் இனிப்புடன் உணவை தொடங்க வேண்டும். அதைத் தொடர்ந்து மத்தியில் உப்பு, இறுதியில் துவர்ப்பு அல்லது காரமான ஒன்றைச் சாப்பிட வேண்டும்.
ஒரு முழுமையான உணவில் இனிப்பு அடங்கும் என்று பலர் நினைக்கிறார்கள். இப்போது எல்லாம் கடைகளில் பிரியாணி வாங்குபவர்களுக்கு கூட பிரெட் அல்வா வழங்கப்படுகிறது. ஆனால் உண்மையில், வயிறு நிரம்பிய பிறகு இனிப்பு சாப்பிடுவது நல்ல பழக்கம் இல்லை. அது ஆரோக்கியத்தைக் கெடுக்கும். இப்படி நீண்ட நாட்கள் சாப்பிடுவதால், எதிர்காலத்தில் சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம்.
இனிப்புகளில் பெரும்பாலும் வெள்ளை சர்க்கரை அதிகம். வெல்லத்தால் செய்யப்படும் இனிப்புகள் மிகக் குறைவு. குறிப்பாக வெளியில் தயாராக இருப்பவை பெரும்பாலும் வெள்ளை சர்க்கரையால் செய்யப்பட்டவை. சர்க்கரை பதப்படுத்தப்பட்ட உணவின் கீழ் வருகிறது. அதாவது இது மிகவும் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அதிகமாக சுத்திகரிக்கப்படும் போது அது நோயை வரவழைக்கும் உணவாகிறது. வெல்லம் அதிகம் சுத்திகரிக்கப்படுவதில்லை. எனவே வெல்லத்தில் செய்யப்பட்ட இனிப்புகளை அவ்வப்போது சாப்பிடுவது நல்லது. ஆனால் சர்க்கரை கலந்த இனிப்புகளை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் கெட்டுவிடும்.
முழு உணவுக்குப் பிறகு, உணவில் உள்ள சர்க்கரை ஒன்றரை மணி முதல் இரண்டு மணி நேரத்திற்குள் இரத்தத்தில் நுழைகிறது. சர்க்கரை அதிகமாக இருந்தால், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். அதே நேரத்தில், நீங்கள் இனிப்புகளை சாப்பிட்டால், சர்க்கரையில் உள்ள குளுக்கோஸ் இரத்த சர்க்கரை அளவை இரண்டு மடங்கு அதிகரிக்கும். இது ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவைக் கொண்டிருக்கிறது. அரிசியில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. இனிப்புகளை உண்பதால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் இருந்தால் இனிப்புகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
எப்போதும் உணவு உண்பதற்கு முன் இனிப்புகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் சாப்பிடும் முன்னர் செரிமான சக்தி மிக அதிகமாக இருக்கும். இதனால் இனிப்பு உணவுகள் எளிதில் ஜீரணமாகும். சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடுவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும்.உடலில் மெதுவான வளர்சிதை மாற்றம் இருந்தால், நீரிழிவு, உடல் பருமன், தைராய்டு கோளாறுகள் போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உணவுக்கு முன் இனிப்புகளை எடுத்து கொள்வது, உடலில் செரிமான ஹார்மோன்களை வெளியிடுவதற்கும், செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் உதவும்.
தினமும் உணவிற்குப் பிறகு ஒரு இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருந்தால், உங்களுக்கு விரைவில் நீரிழிவு நோய் வரும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் நான்கு மணி நேரம் இடைவெளி கொடுத்த பிறகு இனிப்பு எதையும் சாப்பிடுங்கள். இதற்கிடையில், அரிசி மற்றும் பிற உணவுகளில் உள்ள சர்க்கரையை உடல் உறிஞ்சுகிறது. எனவே சாதம் சாப்பிட்ட பின் குறைந்தது நான்கு மணி நேரத்திற்குள் எந்த சர்க்கரை இனிப்புகளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
இனிப்புகளின் மீது ஆசை அதிகமாக இருந்தால், ஒரு சிறிய துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள். அல்லது ஒரு சிறு துண்டு வெல்லம் சாப்பிட்டு செட்டில் ஆகலாம். சாப்பிட்ட பிறகு விறுவிறுப்பாக நடக்கவும். இதனால் இனிப்புகள் மீதான ஆசை குறைகிறது. உயர் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது எப்போதும் நல்லதல்ல. இது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. குறுகிய காலத்திற்குள், விளைவு உங்கள் உறுப்புகளில் இருக்கும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் சிறுநீரகம் மற்றும் இதயம் கடுமையாக பாதிக்கப்படும். இது உயர் இரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. மனதளவில் கூட பல மாற்றங்கள் வரும். விரைவில் எடை அதிகரிக்கும். கோபமும் எரிச்சலும் அடிக்கடி வரும். எனவே சர்க்கரை உணவுகளை எவ்வளவு குறைவாக சாப்பிடுகிறீர்களோ அந்த அளவிற்கு நீங்க ஆரோக்கியமாக இருக்கலாம்.
தினமும் இனிப்பு சாப்பிடுவது நமது ட்ரைகிளிசரைடு அளவுகளை அதிகரித்து அதன் காரணமாக இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். மேலும் நமது உடலில் சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருக்கும் பொழுது அது அழற்சி மற்றும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை ஏற்படுத்தி, வயதான அறிகுறிகளை முன்கூட்டியே கொண்டுவந்து, பல விதமான நாள்பட்ட நோய்களை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த பழக்கம் நமது தூக்க வழக்கத்தை பாதிப்பதால், ஒட்டுமொத்த நல்வாழ்வை சீர்குலைக்கிறது.
உங்களால் கட்டுப்படுத்த இயலாத வகையில் இனிப்பு ஆசை இருந்தால் நிபுணர்களை அணுகி உரிய சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது.