நாட்டுச்சர்க்கரை கலந்த வேர்க்கடலை பர்ஃபி…

வேர்க்கடலை எண்ணெய் தான் முன்னோர்கள் காலத்தில் பலகாரங்களுக்கும், பல உணவு வகைகளிலும் இடம்பெற்றது. காலப்போக்கில் கொழுப்பு மிக்க வேர்க்கடலை உடலின் ஆரோக்யத்தைப் பதம் பார்க்கிறது என்ற பாலீஷான தகவலால் இடையில் தேய்ந்து மறைந்து இப்போது மீண்டும் வேர்க்கடலை பல ரூபங்களில் பொலிவுபெற்றுவருகிறது.

நாட்டுச்சர்க்கரை கலந்த வேர்க்கடலை பர்ஃபி…
X

வேர்க்கடலை எண்ணெய் தான் முன்னோர்கள் காலத்தில் பலகாரங்களுக்கும், பல உணவு வகைகளிலும் இடம்பெற்றது. காலப்போக்கில் கொழுப்பு மிக்க வேர்க்கடலை உடலின் ஆரோக்யத்தைப் பதம் பார்க்கிறது என்ற பாலீஷான தகவலால் இடையில் தேய்ந்து மறைந்து இப்போது மீண்டும் வேர்க்கடலை பல ரூபங்களில் பொலிவுபெற்றுவருகிறது.

வேர்க்கடலையில் என்ன செய்யலாம் என்றெல்லாம் கேட்கவேண்டிய அவசியமே இல்லை. அதை மேல் தோல் உரித்து பச்சையாக சாப்பிடலாம். மேல் தோலோடு வறுத்துசாப்பிடலாம். பறித்த சில நாள்களுக்குள் நீரில் வேக வைத்து சாப்பிடலாம். கொட்டையை ஊறவைத்து சுண்டலாக்கி சாப்பிடலாம். இதையெல்லாம் தாண்டி பித்தமில்லாமல் சாப்பிட முளைக்கட்டி சாப்பிடலாம். வறுத்து தோல்நீக்கி சட்னி, துவையல், இனிப்பு பலகாரங்கள் செய்யலாம். இப்படி நிறைய ரெஸிபிகளை சுவைபட தயாரிக்க வேர்க்கடலை உதவுகிறது.

பொதுவாக சாப்பிட்டு முடித்ததும் ஒரு துண்டு வேர்க்கடலை பர்ஃபியை வாயில் போட்டுக்கொண்டால் செரிமானம் எளிதாகும். சத்தும் கூடும் என்று சொல்வார்கள். இதற்காக மெனக்கெட்டு கடைகளில் வாங்கவேண்டிய அவசி யமே இல்லாமல் வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கலாம். எப்படி என்று பார்க்கலாமா?
தேவை:

வறுத்த வேர்க்கடலை (வறுத்து தோல் நீக்கிய) – 1கப், நாட்டுச்சர்க்கரை –ஒன் றரை கப், நெய் – 5 டீஸ்பூன், ஏலத்தூள் -1 சிட்டிகை.

செய்முறை:
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக் கவும். வாணலியில் நெய் விட்டு உருகியதும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து ஏலத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். அகன்ற தட்டில் நெய் தடவி வைத்துக் கொள்ளவும். நாட்டுச்சர்க்கரை உருகியதும் பொடித்த வேர்க்கடலையைத்தூவி மேலாக தூவி நன்றாக கலந்து வரும்போது தட்டில் கொட்டி நெய் தடவிய ஸ்பூன் அல்லது கத்தியில் தேவையான அளவில் வில்லை போடவும். அரைமணி நேரம் கழித்து வில்லைகளை பிரிக்கவும்.

பர்ஃபி மொறுமொறுப்பாக கடித்து சாப்பிடும்படி வேண்டுமென்றால். நாட்டுச்சர்க்கரை சற்று முதிர்ப்பதம் வரும்வரை காத்திருந்து பொடித்த வேர்க்கடலை சேர்க்கலாம். மெதுவாக வேண்டுமென்றால் சர்க்கரை கரைந்த தும் சேர்த்து இறக்கி வில்லைகள் போடலாம். குழந்தைகளுக்கும் பெரியவர்க ளுக்கும் ஏற்ற சத்தான ஸ்நாக்ஸ் இது. எளிமையாக ஐந்து நிமிடத்தில் செய் யக்கூடிய ஸ்நாக்ஸ்-ம் கூட.
இப்போதே செய்து பாருங்களேன். எல்லோராலும் எளிதாக செய்யமுடியும்.

newstm.in

Next Story
Share it