நீரிழிவு நோயாளிகள் கீரை வாழைப்பழ ஸ்மூத்தி பருகலாமே!

நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கான ஒரு சுவையான ஸ்மூத்தி பரிந்துரைக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். கீரை, வாழைப்பழம் கொண்டு செய்யப்படும் ஸ்மூத்தி ரத்த சர்க்கரை அளவை சமன் செய்வதாக கூறப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள் கீரை வாழைப்பழ ஸ்மூத்தி பருகலாமே!
X

நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள், பொதுவாக எந்த உணவை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனத்துடனும், பயத்துடனும் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். அதோடு சுவையற்ற உணவுகளையே பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. ஆனால் நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கான ஒரு சுவையான ஸ்மூத்தி பரிந்துரைக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். கீரை, வாழைப்பழம் கொண்டு செய்யப்படும் ஸ்மூத்தி ரத்த சர்க்கரை அளவை சமன் செய்வதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மூத்தி செய்ய...

தேவையான பொருட்கள்:

1 கப் - கீரை
1 - முழு வாழைப்பழம்,
1/2 கப் - பாதாம் பால்
தேன் - தேவையான அளவு.

செய்முறை:

கீரை, வாழைப்பழம் மற்றும் பாதாம் பால் கலந்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். இனிப்பு தேவை எனில் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இப்போது சுவையான கீரை, வாழைப்பழ ஸ்மூத்தி பருக தயார்.

நீரிழிவு நோயாளிகள் கீரை வாழைப்பழ ஸ்மூத்தி பருகலாமே!

கீரையில் உள்ள நன்மைகள்:

கீரையில் ஏ, பி 2, சி மற்றும் கே போன்ற வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.

மெக்னீசியம், மாங்கனீசு, ஃபோலேட், இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

கலோரிகள் குறைவாக இருப்பதால், இது இதய நோய்கள், கீல்வாதம் மற்றும் புற்றுநோயையும் எதிர்த்துப் போராடுகிறது.

கீரையை வைட்டமின் சி நிறைந்த உணவுகளுடன் சாப்பிடுவது நல்லது.

வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள் :

வாழைப்பழம் 105 - 250 கிராம் கலோரிகளை கொண்டுள்ளது.

18 சதவீத வைட்டமின் சி, 13 சதவீதம் பொட்டாசியம், மற்றும் ஒன்பது சதவீதம் மாங்கனீசு ஆகியவை உள்ளன.

மேலும், வைட்டமின் பி 6 நிறைந்துள்ளதால் வாழைப்பழம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

newstm.in

newstm.in

Next Story
Share it