தைராய்டு பிரச்சனைகளை சரி செய்யும் அசைவ உணவுகள்!.
தைராய்டு பிரச்சனைகளை சரி செய்யும் அசைவ உணவுகள்!.

அசைவ உணவுகளால் தான் உடலில் கொழுப்பு சேர்வதாக பலரும் நினைக்கிறோம். கடல் சார்ந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் எப்போதும் கொழுப்பை பற்றி கவலை கொள்ள தேவையில்லை.
மீனில் அதிக அளவு புரதச் சத்து நிறைந்துள்ளது. உடல் எடையினைக் குறைக்க விரும்புபவர்களும் தாராளமாக மற்ற அசைவ உணவுகளைத் தவிர்த்தாலும் மீனைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
கண்பார்வைத் திறனை மேம்படுத்துவதால் கண் பார்வைத் திறன் குறைவாக இருப்பவர்கள், வளரும் குழந்தைகள், மாலைக் கண் நோய் பிரச்சினை உள்ளவர்கள் மீனை அவசியம் உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மீனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தைராய்டு பிரச்சினை வெகு விரைவில் குணமாகவதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உடலின் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.
Next Story