இப்படி பேஷியல் செய்து பாருங்க... இயற்கையாகவே முகம் பளபளப்பாகும்!!

நாம் பேஷியல் செய்ய கடைகளில் வாங்கும் பொருட்களும் சரி, பார்லருக்கு சென்றாலும் சரி, ரசாயனம் கலந்த கலவைகளே அதிகமாக இருக்கும். இதை தவிர்த்து, வீட்டிலேயே இயற்கை பொருட்களை வைத்து பேஷியல் செய்ய சில வழிகளை பார்க்கலாம். முதலில் சுத்தமான நீரினால் முகத்தை நன்றாக கழுவி, பின் நீராவியில் முகத்தை சிறிது நேரம் காட்ட வேண்டும். அப்போது நம் முகத்தில்

இப்படி பேஷியல் செய்து பாருங்க... இயற்கையாகவே முகம் பளபளப்பாகும்!!
X

நாம் பேஷியல் செய்ய கடைகளில் வாங்கும் பொருட்களும் சரி, பார்லருக்கு சென்றாலும் சரி, ரசாயனம் கலந்த கலவைகளே அதிகமாக இருக்கும். இதை தவிர்த்து, வீட்டிலேயே இயற்கை பொருட்களை வைத்து பேஷியல் செய்ய சில வழிகளை பார்க்கலாம்.

இப்படி பேஷியல் செய்து பாருங்க... இயற்கையாகவே முகம் பளபளப்பாகும்!!

முதலில் சுத்தமான நீரினால் முகத்தை நன்றாக கழுவி, பின் நீராவியில் முகத்தை சிறிது நேரம் காட்ட வேண்டும். அப்போது நம் முகத்தில் உள்ள அழுக்குகள் வியர்வையுடன் வெளியே வந்து விடும். 5ல் இருந்து 10 நிமிடங்கள் வரை நீராவியில் முகத்தை வைத்துக் கொள்வது நல்லது.

இப்படி பேஷியல் செய்து பாருங்க... இயற்கையாகவே முகம் பளபளப்பாகும்!!

பின் மிருதுவான துணியினால் வியர்வையை ஒற்றி எடுத்து, நல்ல கொழுப்புடன் கூடிய பால் 2 டேபிள் ஸ்பூன் மற்றும் அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து ஒரு பஞ்சில் நனைத்து முகத்தை நன்றாக துடைத்து விட வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை அலச வேண்டும். ஸ்க்ரப் செய்வதற்கு, 2 டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் கடலை மாவு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி, கட்டை விரலாலும் ஆட்காட்டி விரலாலும் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து விட வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை மீண்டும் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிய பின்னர் பப்பாளி பழத்தின் சதைப்பகுதியுடன் பால் கலந்து பசை போல் ஆக்கி, அதை கழுத்துப் பகுதியில் இருந்து மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு 20 நிமிடங்கள் செய்த பின்னர் முகத்தை கழுவி சற்று ஓய்வெடுக்க வேண்டும். தூங்கி எழுந்தால் முகம் பளீச்!!

newstm.in

Tags:
Next Story
Share it