1. Home
  2. ஆரோக்கியம்

அக்குள் கருமை அடியோடு நீங்க இயற்கை வைத்தியம்...

அக்குள் கருமை அடியோடு நீங்க இயற்கை வைத்தியம்...

பெண்களுக்குரிய பிரச்னைகளில் ஒன்று உடலில் ஆங்காங்கே உண்டாகும் கருமை. மறைவான இடங்களில் காற்று படாததால் அந்த இடங்களில் வெளிவரும் வியர்வை அங்கேயே தேங்கி அழுக்குகள்,கிருமிகளை உண்டாக்கி அதிகமாக்கி கருமையை உண்டாக்கி விடும்.

பாவாடை அணியும் இடத்தில் கருமை, கழுத்தின் பின்பகுதியில் கருமை, அக்குளில் கருமை, பிரேஸியர் பட்டையால் விழும் கருமை இவை யெல்லாம் முக்கிய பிரச்னையாக நினைக்கும் பெண்கள் இயற்கை முறையில் கருமையை வெள்ளையாக்க முடியும்.

டீன் ஏஜ் பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகள் அணியவே விரும்புகிறார்கள். ஆனால் அக்குள் பகுதியைச் சுத்தமாக வைத்திருந்தாலும் அந்த இடத் தில் மட்டும் உண்டாகும் கருமையால் வெளியிடங்களில் அவதிப்படுகிறார்கள். அக்குள் பகுதியில் கருமையை நீக்க என்ன செய்யலாம்?

அக்குளில் இருக்கும் கருமையை எந்தவித செயற்கைப் பூச்சுகளையும் கொண்டு போக்க முடியாது ஆனால் இயற்கை முறையில் நீக்கலாம். மாதம் இருமுறையேனும் அக்குளில் இருக்கும் முடிகளை முழுவதுமாக நீக்க வேண்டும்.பிறகுதான் கருமையைப் போக்க முடியும்.

தினமும் காலையில் குளிப்பதற்கு முன்பு உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி சர்க்கரை தோய்த்து அக்குளில் ஸ்க்ரப் போல் மசாஜ் செய்து பத்து நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் நாளடைவில் கருமை மறையும்.

சாறு நிறைந்த எலுமிச்சையை பாதியாக வெட்டி அந்தச் சாறை பஞ்சில் தோய்த்து அக்குளில் தேய்த்து குளிக்கலாம். எலுமிச்சையில் ஆன்டி- செப்டிக், ஆன்டி- பாக்டீரியல் இருப்பதால் இவை சருமத்தில் இறந்த செல்களை நீக்கும் வல்லமையைக் கொண்டது. இதனால் கருமை சிறிது சிறிதாக மறையத் தொடங்கும்.


வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரங்களில் நன்றாக பழுத்த தக்காளியை வட்டமாக வெட்டி மசாஜ் செய்யலாம். நாள் ஒன்றுக்கு 4 லிருந்து 5 முறை இப்படிச் செய்துவந்தால் தக்காளியால் கருமை மறைந்து அக்குள் பளிச்சென்று இருக்கும். அதே போன்று ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்து பிறகு பாசிபருப்பு மாவால் தேய்த்து குளிக்கலாம்.

கற்றாழை சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவும் அருமையான அற்புதமான மூலிகை. கற்றாழை நுங்கை அக்குளில் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால் கருமை மறையும். வியர்வை துர்நாற்றம் இருந்தால் அவையும் மறைந்துவிடும்.

கெட்டி பசுந்தயிருடன் ஒரு டீஸ்பூன் கடலை மாவு கலந்து கருமையாக இருக்கும் இடத்தில் பேக் போட்டு, அரைமணி நேரம் காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவிய பிறகு மாய்ச்சரைஸர் போடவும். வாரம் நான்கு நாட்கள் இப்படி செய்துவந்தாலே சருமத்தில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்து செல்களுக்கு உயிரூட்டும்.

அக்குளைப் போன்றே இடுப்பில் இருக்கும் கருமை, கழுத்தில் இருக்கும் கருமை, பிரேஸியர் கருமை என எல்லா கருமைகளையும் போக்க மேற் சொன்ன இயற்கை வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றினால் போதும்.அனைத்தும் கருமைகளும் மறைந்து சரும நிறத்தை பொலிவோடு வைத்திருக்கும். முடிகளை அவ்வப்போது நீக்கி கருமை மறைய செய்தாலே போதும். வியர்வை நாற்றங்கள் உண்டாகாது. தேவையற்ற நறுமணமிக்க வாசனை திரவியங்களை அடிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. அதோடு...

தொடர்ந்து 2 வாரம் கடைப்பிடித்தாலே போதும். கருமை மறைந்து ஸ்லீவ் லெஸ் உடைகளை இளம்பெண்களை மகிழ்ச்சியாகவே அணியலாம்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like