உடலின் பிரச்சனைகளை முன்கூட்டியே அறிவிக்கும் நகங்கள்!!

உடலின் பிரச்சனைகளை முன்கூட்டியே அறிவிக்கும் நகங்கள்!!

உடலின் பிரச்சனைகளை முன்கூட்டியே அறிவிக்கும் நகங்கள்!!
X

மது உடலின் பல்வேறு பிரச்சனைகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியாமல் தவிக்கின்றோம். நம் விரல் நகங்களைக் கொண்டே ஆரம்பமாகிவிட்ட பிரச்சனைகளைக் கண்டறியலாம்.

நகங்கள் நமது உடம்பில் இருக்கும் பிரச்சனைகளை முன் கூட்டியே அறிவிக்கிறது.
நகங்களில் சிவப்பு அல்லது செம்பழுப்பு கோடுகள் அல்லது புள்ளிகள் இருந்தால் இதய வால்வுகளில் தொற்றுகள் அல்லது இரத்த நாளங்களில் வீக்கங்கள் இருப்பதாக உணரலாம்.

நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால் உடலின் ரத்த அளவு அதிகம் என்பது அர்த்தம். விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக உள்ளது என அறியலாம்.

நகம் மஞ்சள் நிறமாகவோ, வெளிர் மஞ்சள் நிறமாகவோ இருந்தால் மஞ்சள் காமாலையின் அறிகுறியாக கொள்ளலாம். கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா அல்லது மூச்சு சம்பந்தமான நோய்களுக்கான அறிகுறி என்பது அர்த்தம்.

கைவிரல் நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருந்தால் உடல் நலம் பாதிக்கப்படுவதற்கான அறிகுறி. நகம் உடைந்தோ, குறுக்குக் கோடுகளுடனோ காணப்பட்டால் கால்சியம், இரும்புச்சத்து குறைபாடுகள் இருப்பதைக் காட்டுகிறது.

நகத்தில் புள்ளி புள்ளியாக குழிகள் காணப்பட்டால் ‘சோரியாசிஸ்’ எனப்படும் சரும நோய்க்கான அறிகுறி.

விரல்கள் வீங்கி கொழுகொழுவென்று நீளமாக இருத்தல் ஹைப்போ தைராய்டிசம் வரப்போவதை அறிவிக்கிறது. பெண்களுக்கு, ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்தால் ஆஸ்டியோபோரோசிஸ் (வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக அர்த்தம்.

இருதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து, பருத்து, பளபளவென்று முருங்கைக்காய் போன்று காணப்படும். கை விரல் நகப்பூச்சுக்களில் உள்ள இரசாயனம் உணவோடு வயிற்றில் கலந்து பல உபாதைகளை உருவாக்கும். மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலியை உருவாகப்போவதை உணர்த்தும்.

நம் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிவிக்கும் இன்றியமையாத நகங்களை அக்கறையுடன் பாதுகாப்போம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

Tags:
Next Story
Share it