சளி , இருமலை சரிசெய்யும் புதினா..!

சளி , இருமலை சரிசெய்யும் புதினா..!

சளி , இருமலை சரிசெய்யும் புதினா..!
X

கோடையுடன் கொரானாவும் சேர்ந்து நம்மை வாட்டி எடுக்க இருக்கும் இந்தச் சூழ்நிலையில் சளி , இருமல் ,மூக்கடைப்பு வராமல் நம்மை காத்துக் கொள்வது எப்படி என்று இந்தப் பதிவில் காணலாம்.

கோடை வெப்பத்தை தாக்குப் பிடிக்க நீர் அதிகம் அருந்துவது மிகவும் நல்லது. நீர்ச்சத்து குறைந்தால்கூட மூக்கில் அடைப்பு ஏற்படலாம். உடலில் நீர்ச்சத்து போதிய அளவு இல்லையெனில் கண் எரிச்சல், மூக்கு அடைப்பு, வீக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

புதினாக் கீரையை தினசரி உணவில் சேர்த்து வர வறட்டு இருமல், இரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி ,தலைவலி, நரம்பு வலிகளிலிருந்து நிவாரணம் பெற முடியும். சூட்டினால் வரும் தலைவலிக்கு புதினாக்கீரையை அரைத்து நெற்றியில் பற்று போடலாம்.

புதினா இலைகள் சேர்த்த தேநீரைக் காலை வேளையில் தினசரி குடித்து வரலாம். அல்லது வெந்நீரில் புதினா இலைகளைப் போட்டு ஆவி பிடிக்கலாம். புதினாவின் நறுமணம் மூக்கு மற்றும் காதுகள் வழியாக சென்று அடைப்பை சரி செய்வதுடன் புத்துணர்ச்சியோடும் இயங்கச் செய்கிறது.

Next Story
Share it