1. Home
  2. ஆரோக்கியம்

மனதை அள்ளும் கொள்ளு ரெஸிபிகள்


இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி. எள்ளு தெரியும் எள்ளுப்பொடி, எள்ளு உருண்டை, எள்ளு மிட்டாய் என்று விதவிதமாக சாப்பிட்டிருக்கிறோம். சாப்பிடுகிறோம். ஆனால் கொள்ளு சாப்பிட நாங்கள் என்ன குதிரையா என்று கேட்கிறீர்களா? குதிரைத் திறன் பற்றி தெரியும் தானே. குதிரைக்கு வேகம் கொடுக்கக் கூடியவற்றில் கொள்ளும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆங்கிலத்தில் கொள்ளுவை ஹார்ஸ் கிராம் என்று அழைப்பார்கள். கடினமான பணியை செய்பவர்களுக்கு சோர்வு நீங்கவும், வலு கொடுக்கவும் கொள்ளு நிச்சயம் பலன் தரும்.மருத்துவர்களும் கொள்ளு ஆரோக்யமான உணவு என்று பரிந்துரை செய்கிறார்கள். சித்த மருத்துவத்திலும் ஆயுர் வேதத்திலும் கொள்ளை உபயோகப்படுத்துகிறார்கள். கொள்ளில் இருக்கும் பயன்களை பார்ப்பதற்கு முன்பு கொள்ளில் என்னவெல்லாம் செய்ய லாம் என்று பார்க்கலாமா?

கொள்ளு கஞ்சி:
கொள்ளை வாணலியில் வாசம் போக வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்து தோலை நீக்கி வைத்து கொள்ளவும். ஒரு தம்ளர் அரிசிக்கு, ஒரு தம்ளர் பொடித்த கொள்ளை சேர்த்து கால்மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 7 அல்லது 8 விசில் விட்டு இறக்கவும். கெட்டி பதத்தில் இருக் கும். பிறகு உப்பு சேர்த்து கலந்து கஞ்சியாக்கி குடிக்கலாம். இதற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் நன்றாக இருக்கும். (கொள்ளில் கல் இருப்பதால் கல் நீக்கி போடவும்)


கொள்ளு துவையல்:
பொடித்த கொள்ளு- 1 கப், தேங்காய்த் துருவல் – 2 மேசைக்கரண்டி, வரமிளகாய் – காரத்துக்கேற்ப, புளி- சிறு எலுமிச்சை அளவு, உப்பு –தேவைக்கு,பெருங்காயம்- சிட்டிகை அளவு.

செய்முறை: அனைத்தையும் மைய அரைத்தால் கொள்ளு துவையல் தயார். ஆனால் இது இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக் காது. ஆனால் சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். துவையல் சற்று காரமாக இருந்தால் ருசி தூக்கலாக இருக்கும்.

கொள்ளுப்பொடி:
இட்லிப் பொடி போல் கொள்ளு பொடியை அரைத்து பயன்படுத்தலாம். ஆனால் இதன் ருசி கொஞ்சம் மட்டமாகவே இருக்கும் என்பதால் எல்லோ ரும் விரும்பமாட்டார்கள்.

கொள்ளு ரசம்:
கொள்ளை இலேசாக வறுத்து குக்கரில் 10 விசில் வரை வேகவிடவும். வழக்கத்தை விட தண்ணீரை கொஞ்சம் கூடுதலாக விட வேண்டும். வேக வைத்த நீரை வடிகட்டி ரசம் வைக்கும் போது நீருக்கு பதிலாக கொள்ளு வடித்த நீரை பயன்படுத்தலாம். இதுதான் கொள்ளு ரசம். அப்படியே குடிக்கலாம்.மணமாக சுவையாக இருக்கும்.

கொள்ளு இனிப்பு உருண்டை:
கொள்ளு வேகவைத்த நீரை ரசம் வைக்கலாம். கொள்ளை சுண்டல் போல் தாளித்து சாப்பிடலாம்.அல்லது கொள்ளில் வெல்லத்தைப் பொடித்து சேர்த்து மைய அரைத்து சிறு உருண்டைகளாக பிடித்து கொடுக்கலாம். சத்துக்கள் நிறைந்த இனிப்பு உருண்டையை எல்லோருமே விரும்பி சாப் பிடுவார்கள். இதை பூரணமாக வைத்த சுய்யன் உருண்டையும் செய்யலாம்.

முளைகட்டிய கொள்ளு குழம்பு:
கொள்ளை முளைகட்டி குருமா செய்யலாம். இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். இதையே சுண்டலாக்கி சாப்பி டலாம்.

இப்படி விதவிதமான வெரைட்டியில் தயாரிக்கப்படும் கொள்ளுவின் பயன்களைப் பற்றி வேறொரு கட்டுரையில் பார்க்கலாம். அதற்குள் கொள்ளை வாங்கி பயன்படுத்தி சுவைத்து பாருங்களேன்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like