1. Home
  2. ஆரோக்கியம்

மாதவிடாயின்  இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...

மாதவிடாயின்  இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...

பெண்ணாக பிறப்பதற்கே பெரும் பேறு செய்ய வேண்டுமம்மா இப்படியெல்லாம் உசுப்பேற்றும் வசனங்களைப் பெண்களின் மாதவிடாய் காலங்க ளின் போது சொல்லிபாருங்கள் பெண்ணும் பேயாவாள் என்னும் அளவுக்கு வன்மமாகிவிடுவார்கள். அவ்வளவு மன உளைச்சலை கொண்டிருக் கும் மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்.

45 வயதிலிருந்து 50 வயதுக்குள் மெனோபாஸ் காலகட்டங்கள் தொடங்கிவிடும். சில பெண்களுக்கு தற்போது 35 வயது கடந்ததும் உண்டாகிவிடு கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கருப்பைக்கு ஓய்வு கொடுக்கும் தருணம் நம் மனத்திலும் உடலிலும் அதீத மாற்றத்தை உண்டாக்கும். மெனோ பாஸ் காலங்களில் இயற்கையாக சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைகிறது.

இதனால் மாதம் ஒரு முறை வரவேண்டிய மாதவிலக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்தேன் என்று சத்தமில்லாமல் பெயர் பண்ணி விட்டோ அல்லது வந்துவிட்டேன் என்று ஒட்டு மொத்த உதிரத்தையும் கொட்டி அதகளப்படுத்திவிட்டோ செல்கிறது. இப்படியே அவ்வப்போது தலைகாட்டும் மாதவிலக்கு தொடர்ந்து 12 மாதங்கள் வராமல் இருந்தால் மெனோபாஸ் நிலைக்கு வந்துவிட்டதை உறுதி செய்துகொள்ளலாம். அதாவது சினைப்பையிலிருந்து கருமுட்டை உற்பத்தியாவது நிற்பது தான் மெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் இந்த அத்தியாயத்தைக் கடப்பதற்குள் பெண்கள் படும் பாடு வார்த்தைகளில் சொல்லி மாளாது. மன உணர்வு தொடங்கி உடல் உறுப்புகள் வரை பாடாய்படுத்தி எடுக்கும். இன்னபிரச்னை என்று கண்டறியாமல் பெண்கள் மன அழுத்தத்தால் அவதியுறும் காலம் இதுதான்.ஐந்தில் ஒரு பெண்கள் மெனோபாஸ் காலத்தில் மன அழுத்தத்துக்கு உள்ளாவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பிறப்புறுப்பு உலர்தல்:
மெனோபாஸ் காலத்தை நெருங்கும் பெண்களுக்கு முதல் எரிச்சல் பிறப்புறுப்பு உலர்ந்து இருப்பது. ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டால் ஏற்படும் இக் குறைபாடு உடல் உறவில் நாட்டமின்மையை உண்டாக்கும். அக்குளில் முடிகளின் வளர்ச்சி குறையும். மார்பகத்தோற்றத்திலும் மாற்றங்கள் உண்டாகும். கூந்தலில் அதிக உதிர்வு உண்டாகும். இவையெல்லாம் நாள்பட்ட நோயோ என்று பதட்டப்படாமல் மெனோபாஸ் உண்டாவதற்கான அறிகுறி என்பதை புரிந்து இருந்தால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.

சிறுநீர் கசிவு:
நாள்பட்ட வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மலின் போதும் அடக்கமுடியாமல் தன்னிலை மீறி சிறுநீர் கசிதலுக்கு உள்ளாவார்கள். அதையே மெனோபாஸ் நிலையை அடைபவர்களுக்கும் ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிதும், சிறுநீரை அடக்கமுடியாமல் வேக மாக வெளியேற்றிவிடுவதும் அவர்களை மீறி நடக்கும். இதற்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும் மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் அறிகுறிகளில் இவையும் ஒன்று.


மூட் ஸ்விங்க்ஸ்:
பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள். அதிலும் மெனோபாஸ் காலங்களில் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் எளிதில் கொட்டி விடுவார் கள். அழுகை, கோபம், விரக்தி, எரிச்சல்,மன சோர்வு, எல்லாவற்றிலும் பதட்டம், கவனமின்மை இப்படி எல்லாம் கலந்த கலவையாக இருப்பார் கள். தூக்கமின்மையால் பாதிக்கப்படுவார்கள்.

எலும்புகளையும் சேதாரமாக்கும் மெனோபாஸ்:
எலும்பு திசுக்களுக்களின் அடர்த்திக்கும் ஈஸ்ட்ரோஜன் சுரப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறையும் போது எலும்புத் திசுக்களின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கிறது. இது தான் ஆஸ்டியோபெராசிஸ் நோய் என்று அழைக்கப்படுகிறது. இத னால் மூட்டுவலி, தசை வலி உண்டாகும். எலும்புகளில் வலிமை குறைந்து வலியை உண்டாக்கும். சாதாரணமாக கீழே விழுந்தால் கூட எலும்பு வலுவில்லாததால் முறிவை உண்டாக்கும். அதனால் தான் எலும்புகளை வலுவூட்ட கால்சியம் அதிகமுள்ள உணவு பொருள்களை பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தவறாமல் அறிவுறுத்துகிறார்கள்.

இவை தவிர பற்களில் பாதிப்பு, இதய படபடப்பு, சருமம் மரத்து போதல், அதிக வியர்வை இன்னும் பல்வேறு அறிகுறிகளை அள்ளித்தெறித்து விட்டு மன அழுத்தத்தை உண்டாக்கும் மெனோபாஸ் காலத்தைப் பாதுகாப்புடன் கடக்க முடியுமா? மெனோபாஸ் கால உணவு முறைகள் என்ன? இன்னும் பல்வேறு விஷயங்களை அவ்வப்போது பார்க்கலாம் ஆரோக்யம் பகுதியில்…

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like