1. Home
  2. ஆரோக்கியம்

சித்த மருத்துவ குறிப்புக்கள்..! தொடர் தும்மல் நிற்க... மூட்டு வலி குணமாக எளிய வீட்டு வைத்தியம்..!

1

  • ஜலதோஷம் நீங்க ;-- சர்க்கரை இல்லாத கடுங்காப்பி சாப்பிட்டு வர ஜலதோஷம் நீங்கும்.
  • நீர் கோர்வை குணமாக ;-- சிறுகீரையை  உணவில் அடிக்கடி சேர்த்து வர நீர் கோர்வை குணமாகும்.
  • சுவாசக்குழாய் அலர்ஜி குணமாக ;-- குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து 3 நாட்கள் 2 வேளை உட்கொள்ள சுவாசக்குழாய் அலர்ஜி குணமாகும்.
  • சளி,தும்மல் குணமாக ;-- அருகம்புல் சாறு பருகிவர சளி,தும்மல் குணமாகும்.
  • நீர் கோர்வை தீர ;-- கறிவேப்பிலையை பொடி செய்து சர்க்கரை சேர்த்து காலை,மாலை ஒரு கரண்டி சாப்பிட்டு வரலாம்.
  • மூக்கில் நீர் வடிதல்  குணமாக ;-- தழுதாழை இலை சாறை மூக்கில் உறிஞ்ச  குணமாகும்.
  • தொடர் தும்மல் நீங்க ;-- அகத்திக்கீரை சாறு மற்றும் அகத்தி பூ சாறு இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.
  • தும்மல் நிற்க ;--  தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.

மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம்

  1. மூட்டு வலி குணமாக ;-- கணை பூண்டு இலையை வேப்ப எண்ணை விட்டு வதக்கி கட்டி வர குணமாகும்.
  2. மூட்டு பிடிப்பு, மூட்டு வலி குணமாக ;-- சரக்கொன்றை மர விதையை கரைத்து பற்றுப்போட குணமாகும்.
  3. மூட்டு வலி குணமாக ;--அத்திப்பாலை பற்று போட குணமாகும்.
  4. இடுப்பு மற்றும் மூட்டு வலி குணமாக ;-- கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
  5. மூட்டு வலி ;-- நொச்சி இலைசாறு,மிளகு,நெய் சேர்த்து சாப்பிட தீரும்.
  6. மூட்டு வலி தீர ;-- மூட்டு வலி இருந்தால் உணவில் உருளைக்கிழங்கை தவிர்க்க வேண்டும்.
  7. மூட்டு வலி ;-- வேப்ப எண்ணை,விளக்கெண்ணை,தேங்காய் எண்ணை ஆகியவற்றை கலந்து சூடாக்கி தேய்க்க குணமாகும்.

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.

நெருப்பு அல்லது சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

Trending News

Latest News

You May Like