masalaa tea

ஆரோக்யம் குறித்த கட்டுரையில் உடல் நலத்தோடு ஆரோக்ய உணவுகளும் இடம்பெற்று வருகிறது.சமைக்கும் போது அவ்வப்போது சேர்க்கப்ப டும் சத்துமிக்க உணவு பொருள்களிலும் ஆரோக்யம் காக்கப்படும்என்பதால் என்னென்ன ரெஸிபியில் என்னென்னசேர்க்கலாம் என்பதைப் பார்க்க லாமா?
* வெங்காயம், தக்காளிசேர்த்து காரச்சட்னி அரைக்கும்போது அதனோடு இரண்டு கேரட்சேர்த்து அரைத்தால்சத்துக்கூடும்.குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

* மசாலா குருமா வைக்கும் போது தேங்காய் அரைத்து சேர்ப்போம்.வயதானவர்களுக்கு செரிமானம் சம்பந்தமான பிரச்னைகள் பொதுவானது. அதனால் அரைமூடி தேங்காய்க்கு பெரிய கேரட் ஒன்று வீதம் பச்சையாக அரைத்து சேர்க்கலாம். குருமா ருசியாக இருக்கும். கேரட் இனிப்பு தெரி யாது.

* பொரியல், குழம்பு, கூட்டு, அவியல் செய்யும் போது தாளிப்பு பொருள்களில் கடுகு,உ.பருப்பு இருக்கும். இவற்றோடு வெந்தயம், சீரகமும் இடம் பிடிக்கும்படி பார்த்துக்கொண்டால் நிச்சயம் நீரிழிவு பிரச்னைகள், செரிமான பிரச்னைகள் வராது. வெந்தயக் கசப்பும் தெரியாது. கூட்டு செய்யும் போது ஓமம் சேர்க்கலாம். வாசமாக இருக்கும்.

* அவ்வப்போது சாம்பார் வைப்பவர்கள் பருப்பு அதிகம் சேர்ப்பதால் வாயு பிரச்னைக்கு உள்ளாவார்கள். இவர்கள் பருப்பை வேகவைக்கும் போது கட்டி பெருங்காயத்தை சிறிது சேர்த்து வந்தால் வாயு பிரச்னை இருக்காது.

* சமைக்கும் போது சிலர் தாளிப்பு முடிந்ததும் மசாலாவை ஊற்றி, காய்களை வதக்கிய உடனேயோ மிளகாய்த்தூள் சேர்க்கும் போது உப்பு சேர்த்து விடுவார்கள். அப்படி முன் கூட்டி சேர்த்தால் உப்பில் இருக்கும் சத்துக்கள் ஆவியாகிவிடும் என்பதால் எந்த ரெஸிபிக்கும் இறுதியான பதம் வந்த போது உப்பு போட வேண்டும். இறைச்சி வகைகளுக்கு மட்டும் உப்பு சேர்த்து வேகவிடலாம்.

* கீரையை அதிகம்வேக வைத்தால் சத்துக்கள் வீணாகும். அரை வேக்காடாக வேக வைத்தால் வயிற்றுப்போக்கை உண்டாக்கும். பதமாக சமைக்க வேண்டும். அதோடு கீரையின் நிறம் மாறாமல் இருக்க கீரையை வேகவைத்த பிறகே புளி சேர்க்க வேண்டும்.

* வறுத்த எண்ணெய்களை நாள்கணக்கில் பயன்படுத்தினால் நிச்சயம் ஆரோக்ய குறைபாட்டை உண்டாக்கும். பொதுவாக பொரித்த எண்ணெய் களை மூன்று நாள்களுக்குள் பயன்படுத்த வேண்டும். அதிக சூட்டில் எண்ணெயைக் காயவைக்கவும் கூடாது.

* மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிகொடுக்காமல் ஒரு கப் இட்லி மாவில் தேங்காய்த்துருவல், வெல்லம், ஏலத்தூள் சேர்த்து பணியாரத்தவாவில்ஊற்றிகொடுக்கலாம்.தேவையெனில்உலர்பருப்புகளைச்சேர்க்கலாம்.காரத்துக்கு வெங்காயம்,கேரட், பீன்ஸ்,முட்டை கோஸ் காய்கறிகளைச் சேர்த்து காரத்துக்கு பச்சைமிளகாய் அல்லது வரமிளகாய்சேர்த்து பணியாரமாக ஊற்றலாம். தொட்டுக்கொள்ள தேங்காய்ச்சட்னி அருமையாக இருக்கும்.

* மசாலா டீத்தூளை தனியாக கடைகளில் வாங்காமல் இஞ்சியைச் சுத்தம் செய்து தோல்நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி ஈரம் போக வெயிலில் காயவைக்கவும்.பிறகு ஏலக்காய்,காய்ந்த இஞ்சிதுண்டுகள் சேர்த்து மிக்ஸியில்ஒருசுற்று சுற்றி டீத்தூளுடன் கலந்து வைக்கவும். மணக்க மணக்க மசாலா டீத்தூள் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

* தேங்காய்ப்பால் பிழியும் போது வெறும் தேங்காயாக இருந்தால் நெஞ்செரிச்சல் பிரச்னையை உண்டாக்கிவிடும். வெந்நீரை வைத்து மிதமாக காயவைத்து தேங்காயில் சேர்த்து அரைத்து பால் பிழிந்து பசும்பால் கலந்து வைக்கலாம். ருசியும் தூக்கலாக இருக்கும்.

*மாதக்கணக்கில் இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்து அரைத்து வைக்கலாம். அவை வாடை அடிக்காமல் இருக்க, அரைக்கும் போது இரண்டு கல் உப்பு போட்டு அரைத்து டப்பாவில் சேர்க்கலாம்.

* காரக்குழம்பு செய்யும் போது, குழம்புக்கு மசாலாஅரைக்கும்போது கொத்துமல்லித் தழையின் காம்புகளையும், கறிவேப்பிலையையும் அரைத்து சேர்க்கலாம். வீணாகாமல் உடலுக்கு செல்லும்.


newstm.in


newstm.in

Trending News

Latest News

You May Like