1. Home
  2. ஆரோக்கியம்

ஆரோக்ய குறிப்புகளையும் தெரிந்து கொள்வோம் வாங்க..!

1

அன்றாடம் சமைக்கும் போது பச்சைமிளகாயைக் காரத்துக்கு சேர்ப்போம். பச்சை மிளகாய் அதிகம் உடலுக்கு சேர்வது நல்லதல்ல. அதோடு தற்போது ஹைப்ரேட் மிளகாய்கள் ஆதிக்கம் செலுத்துவதால் நல்ல காரமான உடலுக்கு ஆரோக்யம் தரக்கூடிய மிளகை காரத்துக்கு பயன்படுத்தலாம்.

எலுமிச்சை எல்லா வகையிலும் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும். உடலை சோர்வின்றி இயங்கவைக்கும். இயன்றவரை வாரம் இருமுறையாவது எலுமிச் சையை பிழிந்து உப்பு, நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடித்துவாருங்கள். உடலின் ஆரோக்யம் ஆரோக்யமாகவே இருக்கும்.

சிறுவயதிலிருந்தே குழந்தைகளின் எலும்பை பலப்படுத்த தேவையான கால் சியம், புரதம் அதிகமுள்ள உணவுகளை அளிக்க வேண்டும். இயன்றவரை கீரைகள் குறிப்பாக முருங்கைக்கீரை, உலர் பழங்கள், பால், பருப்புகள் கலந்த உணவுகளை அதிகம் கொடுத்து பழக்குங்கள்.

காபி, டீ மட்டுமே அன்றாட பானமாக இல்லாமல் காலத்துக்கேற்ப சூப் வகைக ளையும், பழச்சாறுகளையும், காய்கறி சாறுகளையும் பயன்படுத்துங்கள். சத்துக் கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி, க்ரீன் டீ, சுக்கு காபி, பூண்டு பால் என்று தினம் ஒன்றாக மாறி மாறி பயன்படுத்தினால் சத்துக்கள் சரிசமமாக கிடைக்கும்.

தினம் ஒரு சமையல் என்று அலுத்துக்கொள்ளாமல் காய்கறிகளையும் மாற்றி மாற்றி சமையுங்கள். நீர்ச்சத்துமிக்க காய்கறிகள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் என்று வகை வகையாக சமைக்க திட்டமிடுங்கள். உணவு உண்டபிறகு கண்டிப் பாக பழங்கள் என்பதைக் குடும்பத்தில் அனைவருக்கும் கட்டாயமாக்குங்கள்.

உடல் உழைப்பு குறைந்துவரும் காலகட்டத்தில் உடலை வருத்தி இல்லை யென்றாலும் உடலை உபயோகித்து வேலை செய்ய பழக்குங்கள். வீட்டில் எளிய வேலைகள், மிதமான உடற்பயிற்சி, நடைபயிற்சி இவை எல்லாமே உங்களை புத்துணர்வோடு வைத்திருக்கும். மனதை எப்போதும் இலகுவாக வைத்திருக்க பழக்குங்கள். மன இறுக்கத்தை மேலும் அதிகரிக்காமல் இருக்க சிறந்த வழி உங்கள் மனதுக்குப் பிடித்த பொழுது போக்கில் ஈடுபடுவதுதான்.

உண்ணும் போது வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் உணவில் கவனம் செலுத்தி நன்றாக மென்று சாப்பிடுங்கள். உடலுக்கு தேவையான அளவு நாள் ஒன்றுக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம். இது உடலில் சிறுநீரக கற்களை உண்டாக்காது.

வீட்டை நல்ல நாள்களில் சுத்தம் செய்வது போன்று உடலையும் தூய்மைப்படுத்த ஆறுமாதங்களுக்குஒருமுறையாவது வயிற்றை சுத்தம் செய்ய மருத்துவரின் ஆலோசனையுடன் மாத்திரை எடுத்துக்கொள்வது நல்லது. இதனால் செரிமானக் கோளாறுகள் உண்டாகாமல் குழந்தைகள் மந்தமின்றி வேகமாக செயல்படுவார்கள்.

காய்ச்சல் அறிகுறி உண்டாகும் போதே கஷாயம் வைத்துக்குடிப்பது உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். தொடக்கத்திலேயே சுயமாக மாத்திரைகள் போடாமல் பாட்டி கால கைவைத்தியம் செய்து பார்க்கலாம். தொண்டை கமறல், சளி, இருமல் பிரச்னை இருந்தால் உதிரியாக வடித்த சூடான சாதத்தில் மிளகுப்பொடி, நல்லெண்ணெய், உப்பு சேர்த்து பிசைந்து சிறு கவளமாக உருட்டி வாயில் போட்டு தொண்டையில் மெதுவாக ஒவ்வொரு கவளத்தையும் விழுங்கினால் தொண்டைக்கு நன்றாக இருக்கும்.

எப்போதும் குழம்புவகைகள் மட்டுமே என்று சமைக்காமல் வாரம் ஒருமுறையாவது சத்துக்கள் மிகுந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா, பிரண்டை, தூதுவளை, வல்லாரை போன்றவற்றைக் கொண்டு துவையலாக்கி மிளகு ரசத்தோடு சாப்பிட பழக்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like