இதை தெரிஞ்சிக்கோங்க..! மிளகில் இருக்கு சூட்சுமம்..!

பெரும்பாலும் மிளகு உஷ்ணத்தை அதிகரிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் மிளகு ஆரோக்கியத்தில் அதிக நன்மை தரக்கூடியது.
* ஒரே ஒரு மிளகு போதும்... உண்ணும் உணவு சுவையாக.
* இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும்.
* மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசு முசுவென்று வளரும்.
* நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.
* ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.
* ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண, மூலநோய் வந்த சுவடின்றி தானே மறையும்.
* ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசி எடுக்கும். தொண்டைப்புண்ணும் தொண்டைக்கட்டும் விட்டுப் போகும்.
* எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் வாந்திகூட எட்டி நிற்கும்.
* ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) துரத்தியடிக்கும்.*
*பத்து மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் பயமேயின்றி விருந்துண்ணலாம்.
-
டெய்லி பல் தேய்க்கும்போது மிளகோட உப்பு சேர்த்து தேய்த்தால் பல் கூச்சம், பல்வலி, வாய் துர்நாற்றம் எல்லாம் நீங்கி பல் வெண்மையாகும்.
-
சாதாரண காய்ச்சலுக்கு மிளகு கசாயம் நல்ல மருந்தா இருக்கும்; சளி இருமல் இருந்தால் மிளகு கசாயத்தோட பனைச் சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
-
நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.
-
மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும்.
-
நான்கு பூண்டு பல்லுடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து, சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கை வழியில் நீக்கும்.
-
கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.
-
சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும்.