வாங்க தெரிஞ்சிக்கலாம்..! எது பெஸ்ட்! மட்டன் ஈரலா? சிக்கன் ஈரலா?
சிக்கனை சமைக்கும் பலர் அதன் ஈரலை சாப்பிட மறுப்பார்கள். ஏனெனில் சிக்கன் ஈரல் ஆரோக்கியமானதல்ல என்ற ஒரு கருத்து மக்களிடையே உள்ளது. உண்மையில் மட்டன் ஈரலைப் போன்றே சிக்கன் ஈரலும் ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியது. சிக்கன் ஈரலை சாப்பிடும் போது, உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. இப்போது மட்டன் ஈரலா? சிக்கன் ஈரலா? எது பெஸ்ட்! எது சாப்பிட்டால் சத்து அதிகம் தெரிஞ்சிக்கலாமா ?
மட்டன் ஈரல்
100 கிராம் எடை உள்ள மட்டன் ஈரல் எனப்படும் ஆட்டு ஈரலில் 160 முதல் 170 கலோரிகள் உள்ளன. 20 முதல் 25 கிராம் வரையிலான புரோட்டீன், 5 கிராம் வரையிலான கொழுப்பு சத்து, 400 முதல் 500 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. 2 முட்டை சாப்பிடும் அளவுக்கான கொலஸ்ட்ரால் ஈரலில் உள்ளது.
சத்துக்களை பொறுத்தவரை 100 கிராம் மட்டன் ஈரலில் 6 ஆயிரம் யூனிட் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் பி12 சத்துக்களை பொறுத்தவரை 100 கிராம் மட்டன் ஈரலில் 85 மைக்ரோ கிராம் உள்ளது. இது ஒருநாள் தேவையை விட 30 மடங்கு கூடுதலாக வைட்டமின் பி 12 உள்ளது.
வைட்டமின் பி12 சத்து உங்கள் உடலில் குறைந்தால் நியுரோபதி என கூறப்படும் நரம்புசார் நோய்கள், தீவிர ரத்த சோகை உள்ளிட்ட பிரச்னை ஏற்படும். பெரும்பாலான சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு இந்த வைட்டமின் பி 12 குறைபாடு உள்ளது.
சிக்கன் ஈரல்
100 கிராம் எடை உள்ள சிக்கன் ஈரல் எனப்படும் ஆட்டு ஈரலில் 160 முதல் 170 கலோரிகள் உள்ளன. 20 முதல் 25 கிராம் வரையிலான புரோட்டீன், 5 கிராம் வரையிலான கொழுப்பு சத்து, 400 முதல் 500 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. 2 முட்டை சாப்பிடும் அளவுக்கான கொலஸ்ட்ரால் ஈரலில் உள்ளது.
சத்துக்களை பொறுத்தவரை 100 கிராம் சிக்கன் ஈரலில் 16 ஆயிரம் யூனிட் வைட்டமின் ஏ உள்ளது. இது ஒரு நாளைக்கு தேவைப்படும் வைட்டமின் ஏ சத்துக்களை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.
குழந்தைகளை பொறுத்தவரை வாரத்தில் ஒரு நாள் மட்டன் அல்லது சிக்கன் ஈரல்களை 50 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். சத்துக்குறைபாடுகள் இருந்த குழந்தைகளுக்கு 50 கிராம் ஈரல்களை வாரத்திற்கு இரண்டு முறை உட்கொள்ளலாம்.
பெரியவர்களை பொறுத்தவரை வாரம் ஒரு முறை 100 முதல் 200 கிராம் வரையிலான சிக்கன் அல்லது மட்டன் ஈரல்களை எடுத்துக் கொள்ளலாம்.
கர்பிணி பெண்கள் முதல் 3 மாதங்களில் வாரம் ஒரு முறை 50 கிராமிற்கு மேல் எடுத்துக் கொள்ள வேண்டாம். முதல் மூன்று மாதங்களை தாண்டி விட்டால் 100 கிராம் அளவுக்கு ஈரல்களை எடுத்துக் கொள்ளலாம்.
வைட்டமின் பி 12 சத்து தேவைப்படுவோர்கள் சிக்கன் ஈரல்களையும், வைட்டமின் ஏ சத்து தேவைபடுவோர் மட்டன் ஈரல்களையும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
தற்போது நிறைய பேர் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளனர். இதனால் கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் கலோரி குறைவான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருகிறார்கள். சிக்கன் ஈரலில் புரோட்டீன் அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு. எனவே உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு சிக்கன் ஈரல் மிகச்சிறந்த உணவு. இதை உட்கொள்வதன் மூலம், வயிறு சட்டென்று நிரம்புவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.
விலங்குகளின் உறுப்பு இறைச்சியை உட்கொள்வதால் கிடைக்கும் சுவாரஸ்யமான நன்மைகளுள் ஒன்று, நமது உள்ளுறுப்புக்களின் ஆரோக்கியம் மேம்படும். எனவே உங்களின் உள்ளுறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், சிக்கன் ஈரலை சாப்பிடுங்கள்.