வாங்க தெரிஞ்சிக்கலாம்..! நெல்லிக்காய் சர்க்கரை நோய்க்கு நல்லதா? கெட்டதா ?
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தேன் கலந்த நெல்லிக்காய் சாப்பிடலாமா ?
வெறும் நெல்லிக்காய் சாப்பிடலாமா என்று கேட்டால் நிச்சயம் சாப்பிடலாம். அதிலுள்ள வைட்டமின் சி சத்தும், நச்சுநீக்க தன்மையும் ஆரோக்கியத்துக்கு உதவும். தேனில் பொட்டாசியம் சத்து அதிகமில்லை. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பு அதிகம் சேர்த்த உணவுகளைச் சாப்பிடக் கூடாது என அறிவுறுத்தப்படுவார்கள்.ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பொட்டாசியம் சத்துள்ள சிரப் கொடுப்பதைக்கூட நீங்கள் பார்க்கலாம். அந்த வகையில் தேனில் பொட்டாசியம் இல்லாததால் அது எந்த வகையிலும் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவப்போவதில்லை.
சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு தேன் சேர்த்த நெல்லிக்காய் நல்லது என ஆயுர்வேதம்கூட சொல்கிறது. ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் அது ஏற்றதல்ல."
நெல்லிக்காய் நீரிழிவு நோய்க்கு ஒரு சூப்பர்ஃபுட்டாக கருதப்படுகிறது. ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்துவது, வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவது மற்றும் கணையத்தில் உள்ள செல்களை ஆக்சிடேட்டிவ் அழுத்தம் மற்றும் சேதத்தில் இருந்து பாதுகாப்பது போன்ற நன்மைகளை அளிக்கிறது.
வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் சமநிலைப்படுத்துவதற்கு நெல்லிக்காய் உதவுவதாக ஆயுர்வேதத்தில் கருதப்படுகிறது. நெல்லிக்காயில் உள்ள அதிக அளவு வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் செயல்பாடு காரணமாக இது ரசாயனமாக பார்க்கப்படுகிறது.
நீரழிவு நோய், அல்சர், செரிமான கோளாறுகள், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, வீக்கம் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்துவது, சருமம் மற்றும் தலைமுடி சார்ந்த நன்மைகளை தருவது என்று நெல்லிக்காய் மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பல்வேறு விதமான பலன்களை அளிக்கிறது. ஆகவே நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவில் தினமும் நெல்லிக்காயை சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. எனினும், இதனை மிதமான அளவு சாப்பிட்டால் மட்டுமே முழுமையான பலனை பெற முடியும்.
ரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது
நெல்லிக்காயில் காணப்படும் ஹைபோகிளைசமிக் பண்புகள் காரணமாக இது ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்கி டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக அமைகிறது.
ஆன்டி-ஆக்சிடன்ட்
வைட்டமின் C போன்ற ஆன்டிஆக்சிடன்ட்கள் நெல்லிக்காயில் அதிக அளவு காணப்படுவதால் இது கணையத்தில் உள்ள செல்களை ஆக்சிடேட்டிவ் அழுத்தம் மற்றும் சேதம் ஏற்பாடாமல் பராமரிக்கிறது. அதோடு இன்சுலின் உற்பத்தி மற்றும் உணர்த்திறனை மேம்படுத்துகிறது.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது
ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்திற்கு ஆதரவளிப்பதன் மூலமாக குளுக்கோஸ் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதை நெல்லிக்காய் உறுதி செய்கிறது. இதன் காரணமாக ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை சேமிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.
இதய ஆரோக்கியம்
கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை நெல்லிக்காய் போக்குகிறது.
நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதற்கான டிப்ஸ்:-
ஃபிரஷான நெல்லிக்காயை துண்டுகளாக வெட்டி ஒரு சிட்டிகை உப்பு அல்லது மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடலாம்.
தண்ணீருடன் ஃபிரெஷ்ஷான நெல்லிக்காயை சேர்த்து அரைத்து அதில் சிறிதளவு தேன் கலந்து பருகலாம்.
நெல்லிக்காயை ஊறுகாயாக செய்து தினமும் உணவோடு எடுத்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காயை உலர வைத்து பின்னர் அதனை பொடி செய்து ஸ்மூத்தீ வகைகள், தயிர் அல்லது பிற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.
ஒருவேளை உங்களுக்கு ஃபிரெஷ்ஷான நெல்லிக்காய் கிடைக்காவிடில் மாத்திரை அல்லது பொடியாக கிடைக்கக்கூடிய நெல்லிக்காய் சப்ளிமெண்ட்களை வாங்கி பயன்படுத்தலாம்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே மிகவும் பிரபலமாக விரும்பி சாப்பிடப்படும் இனிப்பு சேர்த்த நெல்லிக்காய் மிட்டாயாகவும் இதனை செய்து சாப்பிடலாம்.
நெல்லிக்காயில் எக்கச்சக்கமான பலன்கள் இருந்தாலும் அதனை சாப்பிடும் பொழுது நாம் ஒரு சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்து உங்களது உணவில் தினமும் நெல்லிக்காயை சேர்த்து வருகிறீர்கள் என்றால் உங்களது ரத்த சர்க்கரை அளவுகளை அவ்வப்போது கண்காணிப்பது அவசியம்.
நெல்லிக்காய் அல்லது அது தொடர்பான பழங்களை சாப்பிடுவதால் அலர்ஜி உண்டாக கூடிய நபர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.