இதை தெரிஞ்சிக்கோங்க..!! காலில் ஆணியா? இதனை போக்க எளிய மருத்துவம்
பெரியவர்களை மட்டும் வரக்கூடிய ஆணி நோய் தற்போது சிறியவர்கள்,இளைஞர்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.காலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பம் காரணமாகவும், அசுத்தமான இடங்களில் காணப்படுகின்ற கிருமிகளாலும் காலில் ஆணி நோய் ஏற்படுகிறது.
காலில் ஏற்படும் ஆணி நோயானது, காலில் ஆணி குத்தினால் வலி எப்படி ஏற்படுமோ அதே போன்று இருக்கும்..இந்த கால் ஆணி பிரச்சனை உள்ளவர்களுக்கு கால்களை தரையில் வைக்கவே முடியாத அளவிற்கு வலி உண்டாகும்.
கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது. காலுக்குப் பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும். கால் ஆணி ஏற்பட்டு விட்டால் அதனை உடனடியாகச் சரிப்படுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.
கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.

வேப்பிலை:
வேப்பிலை இலை பசை மற்றும் குப்பைமேனி இலை பசை இவற்றுடன் சிறிதளவு மஞ்சள் பொடியை நன்றாக கலந்து இந்த பசையை கால் ஆணி உள்ள இடத்தில் இரவு முழுவதும் கட்டி வைத்தால் கால் ஆணி பிரச்சினை சரியாகும். வேப்பிலையும், குப்பைமேனியும் மருத்துவ குணங்கள் கொண்டவையாகும்.
சித்திரமூலம்:
சித்திரமூலம் வேர்ப்பட்டையை ஒரு புளியம் வித்து அளவு எடுத்து அரைத்து, அதனை தூங்க போவதற்கு முன்னால் கால் ஆணி மேல் பூசி வந்தால் 3 நாட்களில் குணம் கிடைக்கும். இதனை செய்யும்பொழுது சிலருக்கு அவ்விடத்தில் புண் உண்டாகும். அப்படி புண் வந்தால் விளக்கெண்ணெயில் 1 கரண்டி எடுத்து அதனுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைத்து, புண் வந்த இடத்தில் பூசினால் புண்ணும் ஆறி, கால் ஆணியும் காணாமல் போய்விடும்.
கடுகு:
ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெயை எடுத்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயில் வறுத்து பொடி செய்த கடுகு, மஞ்சள் பொடி இவற்றை சேர்த்து தைல பதத்தில் காய்ச்சி எடுக்க வேண்டும். இதை ஆற வைத்து வடிகட்டி, இரவு நேரத்தில் தூங்க போகுமுன் கால்களை சுத்தப்படுத்தி விட்டு இந்த தைலத்தை தடவினால் கால் ஆணி குணமாகும்.
மற்றும் மஞ்சள் துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு, வசம்பு ஒரு துண்டு இவற்றை சேர்த்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள்மீது 21 நாட்கள் தொடர்ந்து பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.
அளவு சரியில்லாத செருப்பு அணிவதாலும் ‘காலாணி’ ஏற்படுகிறது.அதிக நேரம் நிற்பவர்களுக்கும் கால் ஆணி ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அப்படியாக அதிக நேரம் நிற்பவர்கள் மென்மையான காலணிகளை அணிய வேண்டும். அப்படி அணியும் போது காலின் அழுத்தம் குறைகிறது.இதுபோல் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.