1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? இத மட்டும் செய்யுங்க... ஒரு ஈ கூட உங்க வீட்டு பக்கம் வராது..!

1

ஒரு பாத்திரத்தில் வினிகர் சிறிதளவு பாத்திரம் தேய்க்கும் சோப் அல்லது liquid எதுவாக இருந்தாலும் ஒன்றாக கலக்கவும். இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கவும். மூடியில் ஈக்கள் நுழைகின்ற அளவிற்கு  ஓட்டைகளை இட்டு மூடி வைக்கவும். வினிகர் வாசத்திற்கு  ஓட்டையில் ஈக்கள் விழுந்து விடும்.

ஒரு 20 மிளகு எடுத்து தூளாக அரைத்து கொள்ளவும். மிளகு தூளை தண்ணீரில் கலந்து வீட்டை சுற்றி தெளிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் தண்ணீரை கொதிக்கவைத்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும். இந்த தண்ணீரை சமையலறையின் ஒவ்வொரு மூலையிலும் தெளிக்கவும். உப்பு நீர் உட்செலுத்தலை ஈக்கள் பொறுத்துக்கொள்ளாது.

வினிகர் வாசனையை ஈக்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே ஒரு பாத்திரத்தில் 1/4 கப் வினிகர் மற்றும் பூக்கலிப்டஸ் எண்ணெய் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். பின் ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி ஈக்கள் வரும் இடத்தில் ஸ்பிரே செய்யுங்கள்.

ஆப்பிள் பாதி துண்டில் கிராம்புகளை சொறுகி ஈக்கள் வரும் இடங்களில் வைத்தால் அந்த நறுமணத்திற்கு வராது.

துளசியில் நமது உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருந்தாலே கூட இதனின் வாசனை என்பது ஈக்களுக்கு முற்றிலும் ஆகாத ஒன்று. அதனால் 1 கைப்பிடி அளவு துளசி இலையினை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.பின்பு கொதித்த தண்ணீரை ஆறவைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து விடுங்கள். இப்போது இந்த துளசி தண்ணீரை ஈக்கள் வரும் அனைத்து இடங்களிலும் தெளித்து விடுங்கள் இனி ஈ என்பதே உங்கள் கண்ணில் படவே படாது.

ஒரு கிண்ணத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த தயிரை வீடு முழுவதும் தெளித்து விடவும்.

இஞ்சி என்பது நமது உடலுக்கு செரிமானத்தை மேம்பட செய்தாலும் கூட இது ஈக்களுக்கு ஆகாத ஒன்றாக இருக்கிறது.ஆகையால் ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் இஞ்சு பொடி மற்றும் 4 கப் தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து முடித்த பிறகு கலந்து வைத்துள்ள தண்ணீரை ஈக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் தெளித்தால் போது ஈக்கள் மீண்டும் வரவே வராது.

Trending News

Latest News

You May Like