1. Home
  2. ஆரோக்கியம்

இன்னைக்கு சண்டே.. இன்று மட்டன் வாங்கும் போது இந்த பகுதி கறியை கேட்டு வாங்குங்கள்..!

1

ஆட்டிறைச்சி, நமது உடல் சூட்டை தணித்து, தோலுக்கு வலிமை அடையச் செய்து, சருமம் பளபளக்க நல்ல தீர்வாக உள்ளது.மட்டனில் செய்யப்பட்ட குழம்பு, கிரேவி, மட்டன் சூப், ஆட்டுக்கால் சூப், இரத்த பொரியல் மற்றும் குடல் குழம்பு இப்படி மட்டனில் பல உணவு வகைகளை அடிக்கிக்கொண்டே போகலாம். மட்டனில் நம் உடலுக்கு தேவையான புரோட்டீன், கலோரிகள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், நம் உடலுக்கு ஒரு புதுவிதமான ஆற்றலையும் தருகிறது. இதனால் தான் காய்ச்சல் உள்ளிட்ட ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட்ட பிறகு நோயுற்றவர்களுக்கு மட்டன் மிளகு சூப் செய்து தருவார்கள்.

ஆட்டிறைச்சியில் கொழுப்பு அதிகமாக இருக்கும். இதனால், மருத்துவர்கள் ஆட்டிறைச்சியை இதய நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதில்லை. மது அருந்தி விட்டு, ஆட்டிறைச்சி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது.

**ஆட்டின் மூளையானது, தாது விருத்தியை ஏற்படுத்துகிறது. மேலும் கண்ணுக்கு குளிர்ச்சி, அதிக நினைவாற்றல், வலிமையான மூளை போன்ற நன்மைகளுக்கு ஆட்டின் மூளை பயன்படுகிறது.ஆட்டின் மூளைப் பகுதியை உணவில் சேர்த்துக் கொண்டால் கபத்தை நீக்கி, மார்பு பகுதியில் இருக்கும் புண்களை குணப்படுத்தி, மார்பக பகுதியை வலிமை அடையச் செய்கிறது.

**ஆட்டின் இதயத்தை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது இதயத்திற்குப் நல்ல பலம் கிடைக்கும். மேலும் நமது மன ஆற்றல் அதிகரிப்பதற்கு நல்ல பலனைத் தருகின்றது.

**ஆட்டின் நுரையீரல் மற்றும் கொழுப்புகள் நமது உடலின் வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், நுரையீரல் மற்றும் இடுப்புப் பகுதிக்கு நல்ல வலிமையைத் தருகிறது.

**ஆட்டு இறைச்சியானது, நமது சிறுநீரக சுரப்பியை வலிமை அடையச் செய்து, ஆண் குறியின் வலிமையை மேம்படுத்துகிறது.

**சூப்பு என்றாலே பலருக்கும் நினைவில் வருவது ஆட்டுக்கால் சூப்புதான். ஆட்டின் கால்களை சூப்பு வைத்து குடிப்பதன் மூலம் நமது எலும்புகள் மேலும் பலம்பெறுகிறது.

**ஆட்டின் தலை பகுதி மனிதனின் எலும்பினை வலுப்படுத்தவும்,  இதயம் சார்ந்த கோளாறுகளும், அதனால் ஏற்படும் வலிகளும் சரியாகும். மேலும் மனிதனின் குடலை வலிமையாக்க ஆட்டின் தலை சிறந்தது.

**ஆட்டு இறைச்சியில், அதனுடைய கால்களை சூப் வைத்து குடித்து வந்தால், நம்முடைய எலும்புகள் மற்றும் கால்கள் நல்ல ஆற்றலை பெறுகிறது.

**ஆட்டிறைச்சியை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நம்முடைய பார்வை கோளாறுகள் சரியாகி, கூர்மையான பார்வை மற்றும் நமது கண்களுக்கு மிகுந்த வலிமை கிடைக்கிறது.

**ஆட்டின் மார்புப் பகுதி (நெஞ்செலும்பு) இறைச்சியை உட்கொள்வதால் சளித்தொல்லை தீரும். உடலுக்கு பலத்தை தரும். நெஞ்செலும்பு சூப் வைத்தும் குடிப்போர் பலர் உள்ளனர். மார்புப் பகுதியில் புண் இருந்தால் அவற்றை குணப்படுத்தக்கூடியது.

**ஆட்டின் ஈரல் பகுதி இறைச்சி உடலின் வெப்பத்தைக் குறைக்கிறது. நுரையீரலுக்கு நல்ல வலிமையை தரும்.

**ஆட்டின் சிறுநீரகத்தை உண்பதனால் பல்வேறு நன்மைகள் உள்ளன. இதனால், இடுப்புக்கும், சிறுநீரகச் சுரப்பிக்கும் வலிமை ஏற்படும். இடுப்பு வலியை சரி செய்யக்கூடியது. தாது சத்துக்கள் அதிகமாகும். 

Trending News

Latest News

You May Like