எருமைப்பாலில் இம்புட்டு விஷயம் இருக்குதா?

எருமைப்பாலில் இம்புட்டு விஷயம் இருக்குதா?

எருமைப்பாலில் இம்புட்டு விஷயம் இருக்குதா?
X


யாரும் எருமைப் பால் உடலுக்கு தீங்கானது என்று சொல்லவே இல்லை. ஆனால் பால் என்றாலே நம்மவர்களுக்கு பசும்பால் தான் உண்மையில் பசும்பாலை போல எருமை பால் உடலுக்கு மிக நன்மை வழங்குகிறது. இதனை பல்வேறு ஆய்வுகள் நிரூபித்து உள்ளது.

எருமைப் பாலில் புரதம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, கார்போஹைட்ரேட் ஆகிய சத்துக்கள் இருக்கின்றது.இது எலும்புகளை வலுப்பெற செய்கிறது இதயத்தை பாதுகாக்கின்றது ரத்த அழுத்தத்தை குறைக்கின்றது எருமைப்பால் சருமத்திற்கும் மிகவும் நல்லது சருமத்தை நன்கு பொலிவு பெறச் செய்கிறது.

பசும்பால் போலவே எருமைப் பாலில் புரதச் சத்து நிறைய உள்ளது.ஆராய்ச்சியின்படி பசும்பாலை விட 10 சதவீதம் அதிக புரதச்சத்து எருமைப்பாலில் தான் உள்ளது.பிறப்பால் களுடன் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது எருமைப் பாலில் கொழுப்பு மிக குறைவு இதய ஆரோக்கியத்திற்கு எருமைப்பால் மிகவும் நல்லது .

எருமை பாலில் கால்சியம் இருப்பதால் எலும்புகளை வலுவூட்ட உண்மையில் பசும்பாலை விட எருமைப் பாலில் தான் கால்சியம் அதிகமாக இருக்கின்றது.எருமைப் பாலில் வைட்டமின் ஏ ,வைட்டமின் சி உள்ளது இவை நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றது மனிதனுடைய உடல் வளர்ச்சிக்கும் தசைகளுக்கும் மிக அவசியமாகும்.

அந்தவகையில் எருமைப்பால் தசைகளை நன்கு வளரச் செய்கின்றது எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்கள் உடலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்

newstm.in

Next Story
Share it