1. Home
  2. ஆரோக்கியம்

வழுக்கைக்கு நிவாரணம் இல்லையா?

வழுக்கைக்கு நிவாரணம் இல்லையா?

தற்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும், தலை முடி உதிர்வு என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் இந்த பிரச்சனை இப்படியே சாதாரணமாக எடுத்துக் கொண்டால் பின்பு தலை வழுக்கையாக மாற அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது. இது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வழுக்கைத்தலை வருவதற்கு மரபணுக்கள் , சுற்றுச்சூழல் மாசு, கெமிக்கல்கள் நிறைந்த ஷாம்பு மற்றும் எண்ணெய், உடல்ரீதியான மன உளைச்சல், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால்முடி உதிர்வு ஏற்படுகிறது. ஒரு சில இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மருத்துவ குணமுள்ள எண்ணெய்களை முறையாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வழுக்கை தலையில்விரைவாக தலைமுடி வளர்ச்சியை தூண்டி தலை முடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

தலைமுடி எப்படி உதிர்கிறது:
டிஹைடிரோடெஸ்டோஸ்டெரோன் (டிஎச்டி) மற்றும் கொலாஜன் போன்றவைகள் நம் உடலில் அதிகரிப்பதால் நம் தலை முடியை அதிகமாக இழக்க நேரிடுகிறது. தலையில் முடி வேர்கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தையும் குறைக்கிறது. இதனால் தலைமுடி பொலிவை இழந்து ,முடி மெலிதாகி பின்பு அனைத்து முடியும் இழக்க நேரிடும்.

தற்போது மரபணுவை சார்ந்த இளம வழுக்கை, நடு வயது வழுக்கை போன்றவை க்கு மருந்துகளால் குணம் கிடைப்பது அரிது. முடிஉதிர்வு நம்முடைய வேலை பலுவினாலும், குடும்ப சிக்கல்கள் போன்ற காரணங்களும் அதிகமான மாசுள்ள பகுதிகளில் வேலை செய்யும் காரணங்களும் சில கெமிக்கல்கல் அதிகமான மருந்துகளை உபயோகிப்பதன் மூலமும், கேன்ஸர் ( cancer) , கெமோ தெரபி(chemo therapy) மருந்துகள் உபயோகித்து வருவதன் மூலமாகவும் முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை நிலைக்கு போகும்போது சில குறிப்பிட்ட இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட எண்ணெய்கள் முடி உதிர்வை தடுத்து தலை முடி அதிகமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவி புரிகிறது.
இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மருத்துவ குணமுள்ள எண்ணெய்களை முறையாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வழுக்கை தலையில்விரைவாக தலைமுடி வளர்ச்சியை தூண்டி தலை முடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

வி. ராமசுந்தரம்

நிர்வாக இயக்குநர் மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர்,

இன்னோராம் பயோஜெனிக்ஸ், சென்னை.

இந்தியா

WWW.innorambiogenics.com.

WWW.innorambiogenics.in.

EMAIL: venkatraman.ramasundaram@gmail.com.

தொடர்புக்கு: 97109 36736/9094040055

Newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like