மெட்டி அணிவிதில் இவ்வளவு மகத்துவமா !!
மெட்டி அணிவிதில் இவ்வளவு மகத்துவமா !!

நம் கலாச்சாரத்தில் பெண்கள் மெட்டி அணிகின்ற பழக்கம் இருந்து வருகிறது. இதனுடைய முக்கியத்துவம் என்ன? இதை அணியவில்லை என்றால் எதாவது பிரச்சினை ஏற்படுமா?
பெண்ணுக்கு, பெருமையும், மங்கலமும் தரக்கூடிய அணிகலன்களுள் முக்கியமானது மெட்டி. திருமணம் ஆனதும், கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில், பெண்கள் மெட்டி அணிவர், அந்த விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும், என்று பெரியோர்கள் சொல்லி வைத்ததற்கு காரணம் உண்டு.
கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான், கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. இம்மெட்டி. நடக்கும் போது அழுத்தப்படுவதால் கருப்பை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது, வெள்ளியில் மெட்டி அணிவதால், வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி, கால் நரம்புகளில் ஊடுருவி, நோய்களை தடுக்கும் ஆற்றல் உடையது. முக்கியமாக கருப்பை நோய்களை கட்டுபடுத்துகிறது.பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம், கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் இருக்கும்.
கர்ப்பத்தின் போது உருவாகும் மயக்கம், வாந்தி என்பவற்றை குறைக்கவும், கருப்பையின் நீர் சமநிலையை பேணுவதற்கும், மெட்டி பயன்படுகிறது.
கால் விரலில் அணியும் மெட்டி, நாம் நடக்கையில் பு மியுடன் அழுத்தப்படுவதால், கர்ப்பிணிப் பெண்களது உடல் பிணிகளைக் குறைக்கும் என்கின்றனர். ஆகையால் பெண்கள் காலில் மெட்டி அணிவது நல்லது. மெட்டி தேய்ந்த பிறகு, தூக்கி எறியக் கூடாது.
அதை அப்படியே கடையில் கொடுத்து உருக்கி, வரும் புது வெள்ளியால் தான், மறுபடியும் மெட்டி செய்ய வேண்டும். எந்த காரணம் கொண்டும் மெட்டியை காலிலிருந்து நீக்கலாகாது என்பர் பெரியோர்.
newstm.in