1. Home
  2. ஆரோக்கியம்

வியர்வை பிரச்சனையா ? இரவு படுக்கைக்கு முன்பு நல்லெண்ணெயை விரலில் தொட்டு கால் பெருவிரலில்...

11

வெயிலில் அதிகம் செல்பவர்களுக்கு அதிகமாக வியர்வை உண்டாகும். வியர்வை என்பதே உடலில் இருக்கும் உஷ்ணம் வெளியேறும் நிலை தான். இது சருமத்துளைகள் வழியாக வெளியேறும். 

உடலில் நீரேற்றம் குறையாமல் தினசரி 3-4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் உஷ்ணத்தை தவிர்க்க செய்யும். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வியர்வையையும் உஷ்ணத்தையும் தணிக்கும்.

பாரம்பரியமாக நெல்லி குடிநீர் குடிக்கலாம். நெல்லி வற்றலை நீரில் சேர்த்து ஊறவைத்து அந்த தண்ணீர் குடிக்கலாம் நன்னாரி வேர்கள் இரவு முழுவதும் தண்ணீர் பாத்திரத்தில் சேர்த்து ஊறவிட்டு மறுநாள் குடிக்கலாம். நன்னாரி குடிநீர் என்று சொல்லப்படுகிறது.

கோடையில் கிடைக்கும் நுங்கு அதிகம் சேர்க்கலாம். இளநீர் தினசரி குடிக்கலாம். இவை வியர்வையை குறைப்பதோடு உஷ்ணத்தை தடுக்கும்.

குளிக்கும் போது இயன்றவரை குளியல் பொடி அதாவது வேப்பிலை, மஞ்சள் கலந்து இருக்க வேண்டும். இது சருமத்தில் கிருமிகளை அண்டாமல் பாதுகாக்கும். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். சருமத்துளைகள் அடைக்கும் எந்த செயலையும் செய்ய கூடாது.

நாட்டு மருந்து கடைகளில் பீர்க்கன் நார் கிடைக்கும். இதை வாங்கி சருமத்தில் மென்மையாக எக்ஸ்ஃபோலியேட் செய்தால் சருமத்துளைகள் அடைபடாமல் பாதுகாக்கலா.ம்.

அதிகமாக வியர்வை இருந்தால் தினமும் இரண்டு முறை குளிக்கலாம். இரவு படுக்கைக்கு முன்பு நல்லெண்ணெயை விரலில் தொட்டு கால் பெருவிரலில் வைக்கலாம். தொப்புளில் விளக்கெண்ணெய் இரண்டு துளி வைத்து படுக்கலாம். இது வேர்க்குருவை தடுக்கும்.

வேனல் கட்டி வந்தால் குயவர்களிடம் (மண் பானைசெய்பவர்கள்) காவிக்கல் வாங்கி வந்து இது நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும். இதை வாங்கி மோரில் குழைத்து வேனல் கட்டிகள் மீது தடவி வந்தால் கட்டிகள் அடங்கும்.

வெப்பத்தால் உண்டாகும் சொறியை வெளியேற்றி சரும அழற்சியை தணிக்கும் பாரம்பரிய செய்முறை இது. ஓட்ஸ் அரைத்து குளிக்கும் நீரில் சேர்க்கவும். பாதிக்கப்பட்ட பகுதியை ஓட்ஸ் நீரில் 30 நிமிடங்கள் வரை வைக்கவும். இது சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பு ஆகியவற்றை நீக்கி சருமத்தை மென்மையாகவும் மாற்றும். இதை தினமும் செய்யாமல் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை வரை செய்யலாம்.

வேர்க்குரு உபாதையை அவ்வபோது எதிர்கொள்பவர்கள் பருத்தி ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். இறுக்கமான ஆடைகள்,ஜீன்ஸ், லெகின்ஸ் சிந்தடிக் தவிர்த்து தளர்வான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடையின் ஆரம்ப கட்டத்தில் இதை செய்து வந்தாலே வேர்க்குருவில் இருந்து விடைபெறலாம்.

Trending News

Latest News

You May Like