உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தானதா?

எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று நினைக்கும் தலைமுறையினருக்கு இந்த விளம்பரங்கள் அல்வாவைப் போல் இனிக்கிறது. கண்டதைச் சாப்பிட்டு, உடல் உழைப்பை செய்யாதவர்கள் டயட்டே இல்லாமல் உடற்பயிற்சியும் இல்லாமல் உடல்பருமனைக் குறைக்கலாம்...

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தானதா?
X

உடல் பருமன்.. எங்கு பார்த்தாலும் எப்படி கேட்டாலும் எதை நினைத்தாலும் கண் முன் வந்து நின்று கர்ண அரக்கனாய் தெரியும் படு மோசமான பிரச்னை இது. யாருக்கு வேண்டுமானாலும் வயது பேதமின்றி அனைவரையும் பாடாய்ப்படுத்தி வருகிறது உடல் பருமன்.

உடல் பருமனுக்கு தீர்வு டயட், உடற்பயிற்சி என்று ஒரு புறம் ஓடிக்கொண்டிருந்தாலும் மறுபுறம் அறுவை சிகிச்சையாலும் உடலைக் குறைக்க முடியும் என்று ஒரு கூட்டம் தவறான வழிக்காட்டுதலால் தவறான இடங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அளவுக்கு அதிகமான உடல் எடையை கொண்டிருப்பவர்களுக்கு மட்டும்தான் அறுவை சிகிச்சை தேவைப்படும் என்கிறார்கள் அனுபவமிக்க மருத்துவர்கள்.

ஆனால் தற்போது அறுவை சிகிச்சையால் உடல் பருமனை எளிதாக குறைக்கலாம் என்னும் போலி விளம்பரங்கள் இன்று அதிகரித்து வருகிறது. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று நினைக்கும் தலைமுறையினருக்கு இந்த விளம்பரங்கள் அல்வாவைப் போல் இனிக்கிறது. கண்டதைச் சாப்பிட்டு, உடல் உழைப்பை செய்யாதவர்கள் டயட்டே இல்லாமல் உடற்பயிற்சியும் இல்லாமல் உடல்பருமனைக் குறைக்கலாம் என்பதையே பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால் உடல் எடையைக் குறைக்கும் அறுவை சிகிச்சையில் பல்வேறு விதமானஅபாயங்களும் இருக்கின்றன என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தானதா?

யாருக்கு அறுவை சிகிச்சை:
அதீத உடல்பருமனால் அவதிப்படுபவர்களுக்குத்தான் அறுவை சிகிச்சை தேவை. இவர்களால் டயட், முறையான பயிற்சியின் மூலம் எடையைக் குறைக்க முடியாது. உயரத்துக்கேற்ற எடை அளவிலும் அதிக வித்தியாசம் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யலாம் என்று உலக சுகா தார நிறுவனம் வலியுறுத்துகிறது. உடல்பருமனால் நாள்பட்ட நீரிழிவு டைப் 2, உயர் இரத்த அழுத்தம், இதயநோய், அதிக கொழுப்பு, செரிமானக் கோளாறு பிரச்னை,பருமனால் உண்டாகும் புற்றுநோய் போன்ற பிரச்னைகளால் அதிக பாதிப்படைபவருக்கே அறுவை சிகிச்சை செய்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் இவர்களது எடை 130 கிலோவுக்கு மேல் இருந்தால் தீவிர கட்டுப்பாட்டின் மூலமும் குறைக்க முடியாமல் இருந்தால் அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் கூறுகிறார்கள்.

அறுவை சிகிச்சை வகைகள்:
பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை. அதிக உடல்பருமன், நீரிழிவு, இரத்த கொதிப்பு பாதிப்பு என்று சேர்ந்திருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை நல்ல தீர் வாகவே இருக்கும்.உடல் பருமனைக் குறைக்கும் ஸ்லீவ் கேஸ்ட்ரோக்டமி, கேஸ்ட்ரிக் பைபாஸ் மற்றும் பல்வேறு விதமான அறுவை சிகிச்சை களே பேரியாட்ரிக் என்று அழைக்கப்படுகின்றது.

இந்த அறுவை சிகிச்சையில் பானை போன்று இருக்கும் வயிற்றுப்பகுதியில் உள்ள இரைப்பை சுருக்கப்படும்.மேலும் பசியைத் தூண்டும் க்ரெலின் என்னும் ஹார்மோன் சுரப்பு பகுதி அகற்றப்படும். சிறு குடல் அளவும் சுருக்கப்படும். இதனால் இரைப்பையின் அளவு குறைந்து உணவின் அள வையும் குறைத்துவிடும். இந்த சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு இயல்பாகவே உடல் எடை குறைய தொடங்கும் அதனால் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் சமச்சீரான சத்துக்களை எடுத்துக்கொள்வது நல்லது என்றும் பரிந்துரைக்கிறர்கள் மருத்துவர்கள்.

லைப்போசக்ஷன் என்னும் சிகிச்சையின் போது உடலுக்குள் மெல்லிய சிறிய குழாய் ஒன்று சருமத்துக்கு அடியில் பொருத்தப்பட்டு கை, வயிறு, இடுப்பு, தொடை, மார்பு பகுதியில் இருக்கும் தேவையற்ற அதிகப்படியான கொழுப்புகள் அகற்றப்படுகிறது. இந்த சிகிச்சையில் பாதுகாப்பான முறையில் இரத்த இழப்பு குறைக்கப்பட்டாலும் மிக அதீத உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சையால் பலனில்லை என்பதே உண்மை,

அப்படியானால் அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தை மட்டுமே உண்டாக்குமா என்று கேட்கலாம். கடுமையான உணவுக்கட்டுப்பாடு, தீவிர உடற்பயிற்சி செய்தும் உடல் பருமனைக் குறைக்க இயலாதவர்கள் உடலில் உபாதை உள்ளவர்கள் அடுத்த கட்ட வாய்ப்பாக அறுவை சிகிச்சை யைப் பற்றி அறிந்து கொள்ள அனுபமிக்க மருத்துவர்களை நாடலாம்.

உங்களைப் பரிசோதித்த பிறகு உங்களுக்கு அறுவை சிகிச்சை தேவையா இல்லையா என்பதை அவர்களே யூகித்து வேண்டிய ஆலோசனைக ளைத் தெரிவிப்பார்கள். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி எதுவுமே இன்றி உடல் பருமனைக் குறைக்க செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் எல் லாமே பாதுகாப்பானது அல்ல. சமயத்தில் உயிரையும் பறிக்க கூடியதே…


newstm.in

newstm.in

Next Story
Share it