உணவில் சிறந்தது அரிசி உணவா? கோதுமை உணவா?
உணவில் சிறந்தது அரிசி உணவா? கோதுமை உணவா?

இந்தியர்களை பொறுத்தவரை உணவு தட்டில் முக்கிய இடம் பிடிப்பது அரிசி சாதம் மற்றும் கோதுமை ரொட்டி ..இவை இல்லாமல் சாப்பிட்ட திருப்தியே நமக்குக் கிடைக்காது என கூட சொல்லலாம்..சரி உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இவை இரண்டில் எது சிறந்த தேர்வாக இருக்கும் என பார்க்கலாம்...
அரிசி, கோதுமை இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே சத்துக்களை தான் கொண்டுள்ளன.....
- கோதுமை மற்றும் அரிசியில் கார்போஹைட்ரேட் அளவும் , கலோரிகளின் அளவும் கிட்டத்தட்ட சரிசமமாகவே உள்ளது.
- அரிசி மற்றும் கோதுமை ரத்த அழுத்தததை கையாளும் விதம் ஒரே மாதிரியாகவே உள்ளன.
- இரும்பு சத்தின் அளவு அரிசி மற்றும் கோதுமையில் சமமாகவே உள்ளது.
சில ஒற்றுமைகள் இருந்தாலும், அரிசி மற்றும் கோதுமைக்கு இடையே ஊட்டச்சத்து வேறுபாடுகளும் இருக்கின்றன....
- கோதுமையானது அரிசியை விட அதிகளவு ஃபைபரை கொண்டுள்ளது. இதனால் நீண்ட நேரம் பசியெடுக்காது.
- அரிசியில் அதிக ஸ்டார்ச் உள்ளது, இதனால் உணவை ஜீரணிக்க எளிதாகிறது.
- அரிசியில் கோதுமையை விட அதிக அளவு வைட்டமின் B உள்ளது.
- கோதுமையில் பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், புரோட்டீன்ஸ் மற்றும் கால்சியம் போன்ற கனிமங்கள் அதிகமாக உள்ளது.
ஊட்டச்சத்தை ஒப்பிடுகையில் அரிசியை விட கோதுமை சிறந்தது என கூறினாலும், அரிசியில் உள்ள நன்மைகளை மறுக்க முடியாது.. எந்த உணவாக இருந்தாலும், அதனோடு கொஞ்சம் உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடை பிடிப்பதினால் உணவு காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க இயலும்.
Next Story