ஆஃப் பாயில் முட்டையின் ருசிக்கு இணையில்லை என்றாலும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்குமா?
ஆஃப் பாயில் முட்டையின் ருசிக்கு இணையில்லை என்றாலும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்குமா?

சிறப்பான, எளிதான காலை உணவு என்றாலே சட்டென்று நம் நினைவிற்கு வருவது ரொட்டி, முட்டை மற்றும் பால்தான். உடலுக்குத் தேவையான ஏழு அமினோ அமிலங்களும் முட்டையில் மட்டுமே நிறைவாக இருக்கின்றன. இவற்றில் லியூடின் மற்றும் ஜீ ஜான்தின் ஆகிய ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் கண் நோய் வராமல் பாதுகாக்கும்.
அசைவம் மட்டுமல்ல சைவம் சாப்பிடுபவர்களும் விரும்பி சாப்பிடுவது முட்டை. இதில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்திருப்பதால் தினமும் ஒரு முட்டையை மருத்துவர்களே குழந்தைகளுக்கு கொடுக்க சொல்லி அறிவுறுத்துகின்றனர். தினமும் வேகவைத்து சாப்பிட பலருக்கும் பிடிப்பதில்லை.
இதனாலேயே பலரும் உடனே ஆஃப் பாயிலாக செய்து சாப்பிட்டு விடுகிறார்கள். இது ஆரோக்கியமானதா உடலுக்கு இதனால் எதுவும் தீங்கு விளையுமா என்பது குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் உள்ளன. இருந்த போதிலும் ஆஃப் பாயில் முட்டையை உட்கொள்வதால் உடலுக்கு நன்மையே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டைகள் பொதுவாக அதிக அளவு கலோரிகளை கூட்டுவதில்லை. ஆனால் பொரித்த முட்டைகளில் கலோரிகள் அதிகம். அதை ஒப்பிடும் போது அரை வேக்காடு முட்டையில் கலோரிகளின் அளவு குறைவே.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆஃப் பாயிலை தவிர்ப்பது நல்லது. காரணம் முட்டை முழுமையாக வேகாததால், அதிலுள்ள பாக்டீரியாக்களும் முழுமையாக அழிக்கப்பட்டிருக்காது.
உடல் உழைப்பு அதிகம் இருப்பவர்களுக்கு ஆஃப் பாயில் முட்டைகள் மேலும் வலுவைச் சேர்க்கவே உதவுகின்றன. எனவே நாம் பொரித்த முட்டை சாப்பிடுவதை விட அரைவேக்காடு முட்டையை சாப்பிட்டால் ஆரோக்கியமே கிடைக்கிறது.
குறிப்பு :- முட்டை சாப்பிட்டால் அதாவது ஆஃப் பாயில் அல்லது பொரித்த முட்டை சாப்பிட்டால் பால் அருந்தலாம். சமைக்காத முட்டையைச் சாப்பிடும் போது கண்டிப்பாகப் பால் அருந்துவதைத் தவிர்க்கவும்.
newstm.in